paytm share price: பேடிஎம் பங்கு உங்களிடம் இருக்கா?: படுமோசமா அடிவாங்கப் போகுதாம்!

Published : Mar 17, 2022, 11:23 AM IST
paytm share price: பேடிஎம் பங்கு உங்களிடம் இருக்கா?: படுமோசமா அடிவாங்கப் போகுதாம்!

சுருக்கம்

paytm share price: இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் வங்கியான பேடிஎம் வங்கியின் பங்குகள் ஏற்கெனவே 71 சதவீதம் சரிந்துள்ள நிலையில் இனிவரும் நாட்களில் மேலும் சரியும் என்று சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் வங்கியான பேடிஎம் வங்கியின் பங்குகள் ஏற்கெனவே 71 சதவீதம் சரிந்துள்ள நிலையில் இனிவரும் நாட்களில் மேலும் சரியும் என்று சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி தடை

பேடிஎம் வங்கி தனது வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை சீன நிறுவனத்துக்கு மறைமுகமாக வழங்கியதாக ரிசர்வ் வங்கி நடத்திய தகவல்தொழில்நுட்பத் தணிக்கையில் கண்டறிந்தது. இதையடுத்து, பேடிஎம் பேமெண்ட் வங்கி,  புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடைவிதித்தது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தனது தகவல் தொழில்நுட்பப்பிரிவை தணிக்கை செய்ய வேண்டும்  என உத்தரவிட்டிருந்தது 

பங்குவிலை சரிவு

இதையடுத்து, பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன. சந்தையில் நேற்று முன்தினம் 33 சதவீதம் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு பங்கு ரூ.700க்கும் கீழ் சரிந்தது.

கடந்த நவம்பர் மாதம் சந்தையில் பட்டியிலிடப்பட்டபின் பேடிஎம் வங்கியின் பங்கு மதிப்பு இதுவரை 71% குறைந்துள்ளது. இனிவரும் நாட்களிலும் பங்கின் மதிப்பு குறையக்கூடும் என்று சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சரியும்

மெக்அக்குயர் கேபிடல் செக்யூரிட்டீஸ் ஆய்வு நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சுரேஷ் கணபதி கூறுகையில் “ சந்தையில் இனிவரும் நாட்களில் பேடிஎம் பங்குவிலை மோசமாகச் சரிந்து ரூ.700லிருந்து ரூ.450 ஆக வீழ்ச்சி அடைய வாய்ப்ப்புள்ளது. பேடிஎம் பங்குவிலை நேற்றுவரை ரூ.634.50ஆக இருந்தது. பங்கின் விலை சரிகிறது என்பதற்காக வருவாயில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது.

நிதி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள், விதிகளுக்குக் கட்டுப்படுதல் போன்றவை பேடிஎம் நிறுவனத்துக்கு தலைவலியாக இருக்கும். இதனால்தான் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கமுடியாமல் ரிசரவ் வங்கியால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நிறுவனத்துக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

டாப் 100 பட்டியல்

பேடிஎம் நிறுவன சந்தைமதிப்பு ரூ.40 ஆயிரம் கோடிக்கும் கீழ் சரிந்துவிட்டதால், பிஎஸ்இ டாப் 100 நிறுவனங்கள் லிஸ்டிங்கில் இருந்தும் பேடிஎம் நிறுவனம் நீக்கப்பட்டது. நவம்பர் 18ம் தேதி பங்குச்சந்தை வர்த்தகத்தின் போது பேடிஎம் பங்கு அதிகபட்சமாக ரூ.1,961 வரை விலை போனது.

ஆனால், பங்கின் உண்மையான ரூ.2,150 எட்டவில்லை. ஆனால், கடந்த இரு நாட்கள் ஏற்பட்ட சரிவில் ஏறக்குறைய 71 சதவீத உண்மையான விலையை பேடிஎம் நிறுவனம் இழந்துவிட்டது. பங்குச்சந்தையில் பேடிஎம் பங்குகள் விலை 20சதவீதம் சரிந்து ரூ.616.55ஆகக் குறைந்துள்ளது. ” எனத் தெரிவித்தார்
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஜனவரி 1 முதல்.. பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. வங்கிகளுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை
Gold Rate: நடுத்தர மக்களுக்கு கிடைத்த குட் நியூஸ்.! அடுத்த 6 மாதத்திற்கு தங்கம் விலை குறித்த கவலை வேண்டாம்.!