வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அடித்தது லக்... ஸ்கூட்டர் வாங்க 50 சதவீத மானியம்...!!

 
Published : Mar 17, 2017, 10:41 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அடித்தது லக்... ஸ்கூட்டர் வாங்க 50 சதவீத மானியம்...!!

சுருக்கம்

fund for ladies to buy scooter

2017 -2018 ஆம்  ஆண்டுக்கான  தமிழக  பட்ஜெட் நேற்று  சட்டமன்றத்தில்  தாக்கல்  செய்யப்பட்டது. அதில்  பல  துறைகளுக்கு  நிதி  ஒதுக்கி  நிதி  மற்றும் மீன்வளத்துறை  அமைச்சர்  ஜெயகுமார் அறிக்கை  வாசித்தார்  

அதில் எதிர்ப்பார்க்கப்பட்ட  அளவிற்கு  குறிப்பிட்ட  துறைகளுக்கு  நிதி ஒதுக்கவில்லை  என்றாலும் , வேலைக்கு  செல்லும்  பெண்களை கவரும் விதமாக , இரு சக்கர  வாகனம்  வாங்குவதற்கு  .50 சதவீத மானியம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஒரு ஆண்டுக்கு , ஒரு லட்சம்  பெண்களுக்கு அதாவது  உழைக்கும் பெண்களுக்கு, இருசக்கரம் வாகனம் வாங்க 2௦ ஆயிரம் ரூபாய் அல்லது  5௦ சதவீதம் மானியம்  வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது .

இதன் மூலம்  வேலைக்கு செல்லும்  பெண்கள்  அதிகம் பயன்பெறுவர்.அதே வேளையில் 2௦ ஆயிரம்  என்பது 5௦ சதவீதம்  என்றால் , இருசக்கர  வாகனத்தின் மதிப்பு 40  ஆயிரமாகும். அந்த 40 ஆயிரம் மதிப்பில்  கிடைக்கக்கூடிய இருசக்கர  வாகனம்  எது ? என்பது  இதுவரை  நிர்ணயிக்கவில்லை  என்பது  குறிப்பிடத்தக்கது .

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

இன்ஜெக்‌ஷன் தேவையில்லை.. சிப்லாவின் Afrezza இன்சுலின் இந்தியாவில் அறிமுகம்
Egg Price: முட்டை வாங்கப் போறீங்களா?! முதல்ல இதை படிங்க.! - நாமக்கல் ஷாக் நியூஸ்!