fuel price hikeஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.74ஆயிரம் போனஸ்: விலைவாசி உயர்வை சமாளிக்க இன்ப அதிர்ச்சி அளித்த நிறுவனம்

Published : Apr 06, 2022, 12:05 PM IST
fuel price hikeஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.74ஆயிரம் போனஸ்: விலைவாசி உயர்வை சமாளிக்க இன்ப அதிர்ச்சி அளித்த நிறுவனம்

சுருக்கம்

fuel price hike: அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம், மின்கட்டணம் ஆகியவற்றை சமாளிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.74ஆயிரத்து 91(750பவுண்ட்) போனஸாக பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம், மின்கட்டணம் ஆகியவற்றை சமாளிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.74ஆயிரத்து 91(750பவுண்ட்) போனஸாக பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

ரூ.74ஆயிரம் போனஸ்

பிரிட்டனில் உள்ள எமரிஸ் டிம்பர் அன்ட் பில்டர்ஸ் மெர்சன்ட் என்ற நிறுவனம் தங்களிடம் பணியாற்றும் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ரூ.74ஆயிரம் போனஸாக அறிவித்துள்ளது. பிரிட்டனில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றை ஊழியர்கள் சமாளிக்கும் வகையில் அந்த நிறுவனத்தின் இயக்குநர் தனது சொந்தப்பணத்திலிருந்து இந்த தொகையை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார்.

இதற்காக அந்த நிறுவனத்தின் இயக்குநருக்கு 45ஆயிரம் பவுண்ட்ரூ.44.46 லட்சம்) செலவாகியுள்ளது என்று லாட்பைபிள் இணையதளம் தெரிவித்துள்ளது

எங்கள் குடும்பத்தைப் போல்

இதுகுறித்து எமரிஸ் டிம்பர் அன்ட் பில்டர்ஸ் மெர்சன்ட் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ பிரிட்டனில் அதிகரி்த்துவரும்எரிபொருள் விலை, மின்கட்டணம், சமையல் கேஸ் விலை உயர்வு ஆகியவற்றை ஊழியர்கள் சமாளிக்கும் வகையில் ஒவ்வொரு ஊழியருக்கும் 750 பவுண்ட் போனஸாக வழங்க முடிவு செய்துள்ளோம்.

இந்த கடினமான நேரத்தில் அனைத்து செலவுகளையும் சமாளி்த்து ஊழியர்கள் வாழ்க்கையை நடத்த இது உதவியாக இருக்கும் என நம்புகிறோம். எங்கள் குடும்பத்தைப் போல், எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின்நலனிலும் இந்த கடினமான நேரத்தில் அக்கறை செலுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளது.

பணவீக்கம் அதிகரிப்பு

எமரிஸ் டிம்பர் அன்ட் பில்டர்ஸ் மெர்சன்ட் நிறுவனத்தின் இயக்குநர் 51வயதான ஜேம்ஸ் ஹிப்கின்ஸ் தி சன் நாளேட்டிடம் கூறுகையில் “ ஒவ்வொருவரும் சிரமப்பட்டும் இந்த நேரத்தில் சில நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புனோம். நாங்கள் அறிவித்த போனஸை ஊழியர்கள் எதிர்பார்க்கவில்லை, உற்காசமடைந்து, மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்”  எனத் தெரிவித்தார்

கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அளித்த  பேட்டியில் “ பிரிட்டனில் அதிகரித்துவரும் விலைவாசி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. பிரிட்டனில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரித்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் அனைத்துக்கும் காரணம்”எனத் தெரிவித்திருந்தார். 
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?