petrol diesel price: வெறும் 5 %தான் உயர்த்தியிருக்கோம்: பெட்ரோல், டீசல் விலை குறித்து ஹர்திப் பூரி விளக்கம்

By Pothy RajFirst Published Apr 6, 2022, 11:21 AM IST
Highlights

petrol diesel price : இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் 5 சதவீதம்தானே மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. வளர்ந்த நாடுகளைப் பாருங்கள் 50 சதவீதம் விலை உயர்த்தியுள்ளார்கள் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் 5 சதவீதம்தானே மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. வளர்ந்த நாடுகளைப் பாருங்கள் 50 சதவீதம் விலை உயர்த்தியுள்ளார்கள் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.

பெட்ரோல் டீசல் விலை

5 மாநிலத் தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. கடந்த மாதம் 24ம் தேதியிலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி உயர்ததி வருகின்றன.

இதுவரை பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.10க்கு மேல் அதிகரித்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பணவீக்கத்தால் சாமானிய மக்களும், நடுத்தரமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். 

5% விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி பதில் அளித்துப் பேசியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ரஷ்யா உக்ரைன் இடையே நடந்துவரும் போர்தான் காரணம் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் எரிபொருள் விலைஉயர்வுக்கு இந்தப் பிரச்சினைதான் காரணம். 

பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வு உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைந்தஅளவுதான் உயர்த்தப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் பெட்ரோல், டீசல்விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

50 சதவீதம்

குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை 50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துவிட்டது. ஆனால், இ்ந்தியாவில் வெறும் 5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ளுங்கள். உக்ரைன் ரஷ்யா இடையே போரின்போது இயற்கை எரிவாயுவிலை சர்வதேச சந்தையில் பலமுறை விலை உயர்ந்தது. 

ஆப்ரேஷன் கங்கா

உக்ரைன் ரஷ்யா இடையே பதற்றமான சூழல் இருக்கும்போதே உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களை வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியது. அதன்படி முதல்கட்டமாக 4ஆயிரம் மாணவர்கள் வெளியேறினர். ஆனால் பல மாணவர்கள் உக்ரைனிலேயே தங்கினர்.

ஆனால், மத்திய அரசு செயல்படுத்தி ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைன் எல்லையில் இருந்த இந்திய மாணவர்கள் மட்டுமின்றி, பல நாட்டு மாணவர்களும் மீட்கப்பட்டனர். போர் தொடங்குவதற்கு முன்பே உக்ரைனில் இருக்கும் இந்தியத் தூதரகம் துரிதமாகச் செயல்பட்டு இந்திய மாணவர்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்தது. ஆப்ரேஷன் கங்கா திட்டம்தான் உலகிலேயே எந்த நாடும் செய்யாத அளவுக்கு வெற்றிகரமாகச் செய்த நடவடிக்கையாகும்

இவ்வாறு ஹர்திப் பூரி தெரிவித்தார்.


 

click me!