11 வயதில் எருமைப் பால் விற்ற சிறுமி... 24 வயதில் பால் பண்ணை முதலாளி.. உழைப்பால் உயர்ந்த ஷ்ரத்தா!

By SG Balan  |  First Published Aug 22, 2024, 12:05 AM IST

ஷ்ரத்தாவின் அசைக்க முடியாத உறுதி, தொலைநோக்கு திட்டம் மற்றும் கடின உழைப்பு ஆகியவை சொந்தக் காலில் நிற்க விரும்பும் பெண்களுக்கு முன்னுதராணமாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.


எருமைப் பால் கறந்து பால் பண்ணைகளுக்கு வழங்கும் மாற்றுத்திறனாளி தந்தைக்கு தன் 11 வயதில் உதவ ஆரம்பித்தார் ஷ்ரத்தா தவான். அப்போது தந்தைக்குத் துணையாக இருக்க நினைத்த ஷ்ரத்தா இப்போது ரூ.1 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிலை நிர்வாகம் செய்பவராக மாறியுள்ளார்.

13 அல்லது 14 வயது இருக்கும்போது, ​​ஷ்ரத்தா எருமை மாடுகளில் பால் கறப்பது முதல் வியாபாரிகளுடன் சாதுரியமாகப் பேசுவது வரை எல்லா வியாபார நுணுக்கங்களையும் உள்வாங்கிக் கொண்டார். தொழிலில் அவரது புத்திசாலித்தனம் இளம் வயதில் இருந்தே வெளிப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

இப்போது 24 வயதாகும் ஷ்ரத்தா இயற்பியலில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றுள்ளார். மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள நிகோஜ் கிராமத்தில் அமைந்துள்ள ஷ்ரத்தா பண்ணையின் உரிமையாளராக இருக்கிறார். இந்தப் பண்ணையில் 80 எருமை மாடுகளை வைத்திருக்கிறார்.

ஜியோவை அடிச்சுத் தூக்கும் ஏர்டெல் பேமிலி பேக்! ஒரே ரீசார்ஜில் 4 பேருக்கு அன்லிமிட்டட் பலன்கள்!!

பால் பண்ணைக்கு எருமை பால் வழங்கி வந்த ஷ்ரத்தா படிப்படியாக முன்னேறினார். தனது லாபத்தை மீண்டும் முதலீடு செய்து பண்ணையை விரிவுபடுத்தினார். 2017ஆம் ஆண்டில் அவரது பண்ணையில் 45 எருமைகள் இருந்தன. பிறகு பாலின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.

அதோடு நிற்காமல், ஷ்ரத்தா மண்புழு உரம் தயாரிப்பில் இறங்கினார். மாதத்திற்கு சுமார் 30,000 கிலோ மண்புழு உரத்தை உற்பத்தி செய்து விற்கிறார். CS அக்ரோ ஆர்கானிக்ஸ் என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்கிறார். ஒரு பயோகேஸ் ஆலையை நிறுவி, எருமைக்கழிவை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் தனது பால் பண்ணையை கழிவுகள் இல்லாத இடமாக மாற்றினார்.

ஷ்ரத்தா தனது வெற்றிகரமான அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் தயாராக இருக்கிறார். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். ஓர் ஆண்டில் பால் பண்ணை, மண்புழு உரம் மற்றும் பயிற்சித் வகுப்பு ஆகிய தொழில்கள் மூலம் சுமார் ரூ. 1 கோடி வருவாய் ஈட்டுகிறார்.

ஷ்ரத்தாவின் அசைக்க முடியாத உறுதி, தொலைநோக்கு திட்டம் மற்றும் கடின உழைப்பு ஆகியவை சொந்தக் காலில் நிற்க விரும்பும் பெண்களுக்கு முன்னுதராணமாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் பெண்கள்! மதுபோதை பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் எது?

click me!