2024-ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. டாப் 10 இந்திய கோடீஸ்வரர்கள் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஃபோர்ப்ஸின் 2024 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர், கடந்த ஆண்டு 169 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்ற நிலையில், இந்த ஆண்டு அது 200 ஆக உயர்ந்துள்ளது.. இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பு 954 பில்லியன் டாலர்கள் ஆகும். இது. கடந்த ஆண்டு $675 பில்லியனில் இருந்து 41% அதிகமாகும்.
டாப் 10 இந்திய பெரும்பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 83 பில்லியன் டாலரில் இருந்து 116 பில்லியன் டாலராக உயர்ந்து, இதன் மூலம் 100 பில்லியன் டாலர் கிளப்பில் நுழைந்த முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்திலும், இந்தியா மற்றும் ஆசியாவின் பணக்காரர் என முகேஷ் அம்பானி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
இந்திய பெரும்பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 2-வது இடத்தில் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 84 பில்லியன் டாலர் ஆகும். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி 17வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் பணக்காரப் பெண்மணி சாவித்ரி ஜிண்டால் கடந்த ஆண்டு 6-வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 4-வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 33.5 பில்லியன் டாலர் ஆகும்.
இந்த பட்டியலில் 25 புதிய இந்திய கோடீஸ்வரர்கள் அறிமுகமாகியுள்ளனர். நரேஷ் ட்ரெஹான், ரமேஷ் குன்ஹிகண்ணன் மற்றும் ரேணுகா ஜக்தியானி ஆகியோர் அடங்குவர். அதே நேரம், இந்த முறை பைஜு ரவீந்திரன் மற்றும் ரோஹிகா மிஸ்திரி ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை..
இந்தியாவின் 10 பணக்காரர்கள் லிஸ்ட்:
முகேஷ் அம்பானி - சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலர்
கௌதம் அதானி - சொத்து மதிப்பு 84 பில்லியன் டாலர்
ஷிவ் நாடார்- சொத்து மதிப்பு 36.9 பில்லியன் டாலர்
சாவித்ரி ஜிண்டால் - சொத்து மதிப்பு 33.5 பில்லியன் டாலர்
திலீப் ஷங்வி - சொத்து மதிப்பு 26.7 பில்லியன் டாலர்கள்
சைரஸ் பூனாவல்லா - சொத்து மதிப்பு 21.3 பில்லியன் டாலர்
குஷால் பால் சிங் - சொத்து மதிப்பு 20.9 பில்லியன் டாலர்
குமார் பிர்லா - சொத்து மதிப்பு 19.7 பில்லியன் டாலர்
ராதாகிஷன் தமானி - சொத்து மதிப்பு 17.6 பில்லியன் டாலர்
லட்சுமி மிட்டல்- சொத்து மதிப்பு 16.4 பில்லியன் டாலர்