மத்திய பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அதிக லாபம் தரும் புதிய அஞ்சல்துறை சேமிப்புத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அதிக லாபம் தரும் புதிய அஞ்சல்துறை சேமிப்புத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் இது என்றும் விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவரும் பயனளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தை பிரகாசமான ஒன்றாக உலகம் அங்கீகரித்துள்ளது. நமது பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
Union Budget 2023-24: விவசாய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்
இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக பெண்கள் மற்றும் முதியோருக்கான தபால் சேமிப்புத் திட்டங்களையும் அறிவித்துள்ளார்.
பெண்கள் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். இத்திட்டத்தில் 7.5 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
முதியோர் சேமிப்புத் திட்டத்தில் அதிகபட்ச டெபாசிட் வரம்பு இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது 15 லட்சம் ரூபாய் ஆக இருந்த வரம்பு இப்போது 30 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
மாதந்திர வருவாய்க்கான தனிநபர் சேமிப்புக் கணக்கின் அதிகபட்ச டெபாசிட் வரம்பு 4.5 லட்சம் ரூபாயில் இருந்து 9 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல கூட்டு சேமிப்புக் கணக்குக்கான டெபாசிட் வரம்பு ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.