
அலுவலக கணினிகள் மற்றும் சாதனங்களில் ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI கருவிகள் மற்றும் செயலிகளை பதிவிறக்கம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று நிதி அமைச்சகம் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. AI மாடல்கள் தரவு மற்றும் ஆவணங்களின் ரகசியத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த மாதம் நிதித்துறையில் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பிய ஒரு தகவலில், அலுவலக சாதனங்களில் AI கருவிகள் அல்லது AI செயலிகளை பயன்படுத்துவதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என அமைச்சகம் கூறியிருக்கிறது.
"அலுவலக கணினிகள் மற்றும் சாதனங்களில் உள்ள AI கருவிகள் மற்றும் AI செயலிகள் (ChatGPT, DeepSeek போன்றவை) அரசு, தரவு மற்றும் ஆவணங்களின் ரகசியத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது," என்று அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை ஜனவரி 29 அன்று ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.
பழந்தமிழர்கள் பயன்படுத்திய 'எலும்பு முனைக் கருவி' கண்டெடுப்பு: தங்கம் தென்னரசு தகவல்
ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு கவலைகள் காரணமாக சீனாவில் ஏஐ மாடலான டீப்சீக்கை (DeepSeek) தங்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளில் பயன்படுத்துவதைத் தடை செய்திருக்கின்றன. அதேபோல இந்தியாவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தற்போது, செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான ChatGPT ஐ உருவாக்கிய OpenAI இன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் இந்திய சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் புதன்கிழமை அரசின் உயர் அதிகாரிகள், தொழில்துறை தலைவர்களைச் சந்தித்து உரையாடுகிறது.
சாட்ஜிபிடிக்குப் போட்டியாக மாறியுள்ள சீன AI மாடல் டீப்சீக் (DeepSeek) மிகவும் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டது என்பதால், உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. வெறும் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் டீப்சீக் உருவாக்கப்பட்டிருக்கிறது மேலும், ChatGPT போன்ற AI மாடல்களுடன் ஒப்பிடும்போது DeepSeek இன் R1, கணினி சக்தியின் ஒரு பகுதியைப் பயன்படுத்துகிறது.
நீண்டகாலமாக பில்லியன் கணக்கான டாலர்களை AI முதலீடுகளில் செலுத்திவந்த அமெரிக்க தொழில்நுட்பத் துறை - கடந்த வாரம் டீப்சீக் அறிமுகமானதும் தலைகீழாக மாறியுள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் (Appstore) இல் உள்ள இலவச செயலிகள் வரிசையில் டீப்சீக் (DeepSeek), சாட்ஜிபிடியை (ChatGPT) முந்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
கார் கடன் வாங்கப் போறீங்களா? முதலில் இந்த 10 விஷயங்களை செக் பண்ணுங்க!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.