பெரிய   எதிர்பார்ப்பில்   பிப்ரவரி  1  ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் ..!!! புதிய திட்டம் வெளியாக வாய்ப்பு ...!!!

First Published Jan 3, 2017, 1:28 PM IST
Highlights


பெரிதும்   எதிர்பார்க்கப்பட்ட   மத்திய பட்ஜெட்  பிப்ரவரி  1  ஆம் தேதி தாக்கல் ....

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இருக்கும் மத்திய  பட்ஜெட், பிப்ரவரி  1  ஆம்  தேதி   தாக்கல்  செய்யப்பட உள்ளதாக   மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது  தொடர்பாக ,  மத்திய  உள்துறை  அமைச்சர்  ராஜ்நாத் சிங் தலைமையில்  அமைச்சரவை  கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் , 2017 ஆம் ஆண்டிற்கான ,  மத்திய   பட்ஜெட்டானது ,  பிப்ரவரி  1  ஆம் தேதி தாக்கல்   செய்யப்படும்  என  முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்த  துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது  என  முக்கிய முடிவுகளை  எடுக்கும்  விதமாக,  இம்மாதம் இறுதியில் , அதாவது ஜனவரி  31  ஆம் தேதி, பாராளுமன்ற  பட்ஜெட் கூட்ட தொடரை கூட்ட  முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே பட்ஜெட்டுக்கு என்று தனி பட்ஜெட் இல்லாமல், மத்திய  பட்ஜெட்டின்  ஒரு பகுதியாக தான்  ரயில்வே பட்ஜெட்  இருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய்  நோட்டு செல்லாது  என  அறிவித்த பின்பு, இந்த ஆண்டு  தாக்கல்  செய்யப்படும்  முதல் பட்ஜெட் இது என்பதால், பல  கூடுதல் சலுகைகள்  இடம் பெறலாம்  என  எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

 

 

 

tags
click me!