fd interest rates 2022: FD வைப்புத் தொகை மெச்சூரிட்டி முடிஞ்சதுமே எடுத்திருங்க! விதிமுறையை மாற்றியது ஆர்பிஐ

By Pothy RajFirst Published May 16, 2022, 12:52 PM IST
Highlights

fd interest rates 2022 : நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது. அதேசமயம், வங்கிகளில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்களுக்கும் புதிய விதிமுறையை ஆர்பிஐ வகுத்துள்ளது.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது. அதேசமயம், வங்கிகளில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்களுக்கும் புதிய விதிமுறையை ஆர்பிஐ வகுத்துள்ளது.

நாட்டில் பணவீக்கம் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்தையும் கடந்து கடந்த 3 மாதங்களாகச் சென்றுவிட்டது. மார்ச் மாதத்தில் 7 சதவீதம் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக உயர்ந்தது. இதையடுத்து, கடனுக்கான வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி 4 சதவீதத்திலிருந்து 40 புள்ளிகள் உயர்த்தியது, இதனால், கடனுக்கானவட்டி வீதம் 4.40 என்று அதிகரித்தது

ரிசர்வ் வங்கி உத்தரவைத் தொடர்ந்து, அனைத்து வங்கிகளும் ரெப்போ ரேட்டையும், வைப்புத் தொகைக்கான வட்டியையும் உயர்த்தி வருகின்றன. கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்ட அதேநேரத்தில் வங்கிகளில் லட்சக்கணக்கில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்களுக்கும் வட்டிவீதம் கூடுதலாகக் கிடைக்கும்.

ஆனால் வைப்புத் தொகை வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்வகையில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை புகுத்தியுள்ளது. இந்த விதிமுறையால், வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள், உரிய மெச்சூரிட்டி காலம் முடிந்தவுடனே பணத்தை எடுத்துவிட வேண்டும், இல்லாவிட்டால் வட்டி குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதலால், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள் நிச்சயம் இந்த விதிமுறையை தெரிந்து கொள்வது அவசியம் 

என்ன விதிமுறை மாற்றம்

ரிசர்வ் வங்கி சமீபத்தில் வைப்புத் தொகை(பிக்ஸட் டெபாசிட்) விதிகளில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி ஒருவர் வைப்புத் தொகை வங்கியில் வைத்திருந்து அதன் முதிர்ச்சிகாலம் முடிந்தபின்பும் எடுக்காமல் இருந்தால்,  அதற்கு வட்டி குறைவாகக் கிடைக்கும். அதாவது, வைப்புத் தொகைக்கான வட்டியைப்பெற முடியாது, மாறாக, சேமிப்புக் கணக்கிற்கான வட்டிதான் கிடைக்கும்

பெரும்பாலான வங்கிகள் வைப்புத் தொகைக்கு அதாவது 5 முதல் 10 ஆண்டு வைப்புத் தொகைக்கு 5 சதவீதம் வட்டி வழங்குகின்றன. ஆனால் சேமிப்புக் கணக்கில் வட்டி 3 முதல் 4 சதவீதம் மட்டுமே இருக்கிறது. வைப்புத் தொகை முதிர்வுகாலம் முடிந்தபின்பும் அதை வங்கியிலிருந்து எடுக்காமல் இருந்தால், வைப்புத்தொகைக்கான வட்டியை வழங்காமல் சேமிப்புக்கணக்கிற்கான வட்டிதான் கிடைக்கும். அதாவது எது குறைவான வட்டியாக இருக்கிறதோ அதுதான் வழங்கப்படும். 
இந்தபுதிய விதிமுறை அனைத்து வர்த்தக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறுநிதி வங்கிகள், மண்டல வங்கிகளுக்குப் பொருந்தும். 

பழைய விதிமுறையின்படி வைப்புத்தொகை முதிர்ச்சிகாலம் முடிந்தபின்பும் பணத்தை எடுக்காமல் இருந்தால், எத்தனை காலத்துக்கு டெபாசிட்செய்திருந்தீர்களோ அதே வங்கி மீண்டும் நீட்டித்துக்கொள்ளும். அதாவது சேமிப்புக் கணக்கு அல்லது வைப்புத்தொகையில் வட்டி எதுகுறைவாக இருக்கிறதோ அதை வழங்கும்

click me!