
மாதத்தில் 2-வது சனிக்கிழமை என்பதால் இந்த வாரத்தில் மட்டும் வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள்விடுமுறை விடப்பட்டது.
இன்று புத்தபூர்ணிமா என்பதால், வட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் வங்கிகள் தொடர்ந்து 3 நாட்கள் இயங்கவில்லை.
ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டரின்படி, புத்த பூர்ணிமா தினமான இன்று, பல்வேறு மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மாநிலத்தைப் பொறுத்து மாறுபடும்.
மே 16ம்தேதி(இன்று) புத்த பூர்ணிமா தினமான இன்று, திரிபுரா, பேலாபூர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப்,ஹரியானா, உத்தரகாண்ட், ஜம்மு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, புதுடெல்லி, மே.வங்கம், ஜார்க்கண்ட், இமாச்சலப்பிரதேசம், ஸ்ரீநகர் ஆகியவற்றில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன
ஏற்கெனமே மே 14ம்தேதி சனிக்கிழமை, மே 15ம்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 நாட்கள் விடுமுறை, இன்று புத்த பூர்ணிமா என்பதால் 3 நாட்கள் தொடர்விடுமுறை வங்கிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், தென் மாநிலங்களில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம்,கேரளா மாநிலங்களில் வங்கிகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.