அத்திப்பள்ளியில் பட்டாசுகளுக்கு 90% தள்ளுபடி - வைரலாகும் பில் உண்மையா? Fact Check

Published : Oct 21, 2025, 11:40 AM IST
Crackers Deals

சுருக்கம்

பெங்களூரு வாசிகள் தீபாவளிக்கு அத்திப்பள்ளியில் பட்டாசு வாங்குவது வழக்கம், காரணம் விலை ஆகும். சமூக வலைதளங்களில் வைரலான 90% தள்ளுபடி பில், உண்மையா என்பதை பார்க்கலாம்.

பெங்களூரில் தீபாவளி காலத்தில் பட்டாசு வாங்க வேண்டும் என்றால், பெரும்பாலானவர்கள் சிவகாசி பட்டாசு தேடுவார்கள். ஆனால் நேரடியாக சிவகாசிக்கு செல்வது சுலபமில்லை. அதற்கு பதிலாக, கர்நாடக–தமிழக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி போன்ற இடங்களில் வாங்குவார்கள். காரணம்? விலை குறைவாகவும், வரி கட்டணமும் குறைவாகவும் இருக்கும்.

வைரலாகும் பில்

இந்த பில் ஒரு பெங்களூரு வாசி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியது: "நான் அத்திப்பள்ளியில் ஒரு வழியாக பட்டாசு வாங்கிவிட்டேன். இதுவே அந்த பில்!" என்றார். வாசகர்கள் இதைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறார்கள்.

அத்திப்பள்ளியில் அதிர்ச்சி டிஸ்கவுன்ட்

இந்த பில்லில் 90% வரை டிஸ்கவுன்ட் கொடுத்திருப்பது நிச்சயமாக கவனத்தை ஈர்க்கும் விஷயம். பொதுவாக ஒரு பொருளுக்கு ரூ.1100 விலை இருந்தால், அதற்கு 90% தள்ளுபடி வைத்து ரூ.110-க்கு விற்பனை செய்வது, வாசகருக்கு ஒரு காமெடி போல தோன்றலாம்.

விலை சரிபார்ப்பு

உதாரணமாக, பில்லில் 15cm ஸ்பார்க் ரூ.2850-க்கு 5 பீஸ்கள், 30cm கோல்டு ஸ்பார்க் ரூ.2550-க்கு 5 பீஸ் உள்ளிட்டவை சேர்த்து, 90% தள்ளுபடி செய்துவிட்டு ரூ.8478 தான் செலுத்தியுள்ளனர். இது சாதாரண விலை போல தெரியாது.

ஏன் எல்லை முக்கியம்?

கர்நாடக–தமிழக எல்லை போன்ற இடங்களில் வாங்குவதன் காரணம் வரி கட்டணத்தை குறைக்கவும், விலை குறைவாகவும் இருக்கும். இது தீபாவளி காலத்தில் பட்டாசு வாங்கும் அனைத்து வாசிகளுக்கும் முக்கிய டிப்ஸ் ஆகும். இதனை பலர் பயன்படுத்தி வருகின்றனர். பெங்களூரில் பட்டாசு வாங்கும்போது, ​​அத்திப்பள்ளி மற்றும் எல்லை பகுதிகளைச் சீராகப் பார்க்கவும். விலை சரிபார்ப்பு செய்யுங்கள், அதிக தள்ளுபடி என்றால் உண்மையா என கணக்கிட்டு வாங்குங்கள்.

சலுகை உண்மையா?

இந்த பில் போன்ற சலுகைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு பெரியது போல தோன்றலாம். எப்போதும் விலையை ஒப்பிடுவது, வீட்டு டெலிவரி வசதி, தரம், பாதுகாப்பு போன்றவற்றை கவனித்து வாங்குவது சிறந்தது. மேற்கண்ட பில்லில் சலுகை என்ற பெயரில் அளித்திருப்பது சலுகையே அல்ல. அது சாதாரண விலை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு