
வீடு, கடை வாடகைக்கு விடுவோருக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டபின் ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கும்போதும் வரிவிதிப்பு, வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதியநிதியாண்டு பிறந்துள்ளது. இந்த நிதியாண்டிலிருந்து ஜிஎஸ்டி வரியில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
செங்கலுக்கு வரி
செங்கல் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இன்புட் டேக்ஸ் கிரெடிட்(ஐடிசி) இல்லாமல் 6 சதவீதம் வரியும், ஐடியுடன் செலுத்துவதாக இருந்தால் 12 சதவீதம் வரி செலுத்தும் விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு முன் செங்கல் உற்பத்திக்கு 5 சதவீதம் விதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி 6 சதவீதமாகவும், ஐடிசியுடன் 12சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி செங்கல் உற்பத்தி, மேல்தளத்தில் பதிக்கும் ஓடுகள், சாம்பலில் தயாரி்க்கப்படும் செங்கல்கள், ஆஷ் பிளாக், நிலக்கரிச் சாம்பலில் தயாரிக்கப்படும் செங்கல் அனைத்துக்கும் காம்போஷிசன் திட்டம் பொருந்தும்.
12% ஜிஎஸ்டி
ஆனால், இதுபோன்ற அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதுமின்றி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வதந்திகளையும், பொய்யான செய்திகளையும் சிலர் பரப்பி வருகிறார்கள். அந்த வகையில் வீட்டுவாடகை, மற்றும் கடை வாடகைக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், வரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் இது அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின
போலியானது உண்மையில்லை
ஆனால், இது பொய்யான தகவல், போலியானது, என்று மத்திய அரசின் பிஐபி உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்துள்ளது. மத்திய அரசின் பொது தகவல் மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டஅ றிக்கையில் “ வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வீட்டு வாடகை, கடை வாடகைக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டம் ஏதும் மத்திய நிதிஅமைச்சகத்துக்கு இல்லை. இதற்கு முன் நிதியமைச்சர் அதுபோன்ற திட்டம் எதையும் முன்மொழியவில்லை.
தவிருங்கள்
வரும் ஜிஎஸ்டி கூட்டத்திலும் இதுபோன்ற திட்டத்தை முன்வைக்காது.ஆதலால், இந்த பதிவை மற்றவர்களுக்கு பகிர்வதைத் தவிருங்கள். இதுபோன்ற தவறான தகவல்கள், வதந்திகளைக் கொண்ட செய்திகளை மக்கள் தவிர்க்க வேண்டும், இதைப் பகிர்வதையும் தவிர்க்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.