boris Johnson :கடந்த 2 ஆண்டுகளாக இந்தியப் பயணத்தை ஒத்திவைத்திருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் இந்த மாதஇறுதியில் இந்தியாவுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக இந்தியப் பயணத்தை ஒத்திவைத்திருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் இந்த மாதஇறுதியில் இந்தியாவுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயணத்தின்போது இந்தியா, பிரிட்டன் இடையே நடந்துவரும் தடையில்லா ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முக்கியக் கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதம் இறுதி
இம்மாதம் 22-ம் தேதி போரிஸ் ஜான்ஸன் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பிரிட்டன் அரசு இதுகுறத்து ஏதும் தெரிவிக்கவில்லை. கடந்த மாதம் பிரதமர் மோடியுடன், போரிஸ் ஜான்ஸன் தொலைப்பேசியில் பேசியிருந்தார் அப்போது பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
வர்த்தக உறவு
இந்தியா, பிரிட்டின் இடையிலான உறவு வலுப்பெறுதல், வளர்ச்சி பெறுதல், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை தொடர்ந்து வலுப்பெறச் செய்தல் ஆகியவற்றுக்கு பிரதமர் போரிஸ்ஜான்ஸனின் பயணம் உதுவும் என பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடந்த சிஓபி26 காலநிலை மாநாட்டில் போரிஸ் ஜான்ஸனும், பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசியிருந்தனர். அதன்பின் தொலைப்பேசியில் மட்டுமே இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிவந்தனர்.
பயன்
இதற்கிடையே இந்தியா வருவதற்கு பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மிகுந்த ஆர்வமாக இருப்பதாக பிரிட்டன் அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2030ம் ஆண்டுக்குள் பிரிட்டன், இந்தியா வர்த்கத்ததை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், பிரிட்டன் வர்த்தகத்துக்கும், ஊழியர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் என பிரிட்டன் அரசு நம்புகிறது
ரஷ்யத் தடை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில், ரஷ்யாவுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகளை பிரிட்டன் விதித்துள்ளது. ஆனால், ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கும் இந்தியாவுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் பயணிக்க இருக்கிறார். இந்தப் பயணத்தின்போது உக்ரைன், ரஷ்யா போர் குறித்து பிரதமர் மோடியிடம் போரிஸ் ஜான்ஸன் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது
இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்த 2 கட்ட பேச்சுவார்த்தை ஏற்கெனவே முடிந்துவிட்டது.அடுத்ததாக 3-வது கட்டப் பேச்சு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. அந்த நேரத்தில்தான் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் இந்தியாவுக்கும் பயணிக்க இருக்கிறார். இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் வலுப்படும் எனத் தெரிகிறது