அமலாக்கப்பிரிவு அதிரடி முடிவு... ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் பெண் சிஇஓ சொத்துக்கள் திடீர் முடக்கம்..!

By vinoth kumarFirst Published Jan 11, 2020, 6:40 PM IST
Highlights

மும்பையில் உள்ள சந்தா கொச்சாருக்கு சொந்தமான வீடு, அவருடைய சில முதலீடுகள், பங்கு கள், அவரது கணவர் தீபக் கோச்சாரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக சந்தா கோச்சார் 2009-ம் பொறுப்பேற்றார். வீடியோகான் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் வேணுகோபால் தூத், சந்தா கொச்சார் கணவர் தீபக் கொச்சார் நடத்தி வந்த நியுபவர் ரினிவபிள் நிறுவனத்தின் பங்கு தாரர்களில் ஒருவர். 

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓவும், நிர்வாக இயக்குநருமான சந்தா கோச்சாரின் ரூ.78 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் வழங்கியது தொடர்பான வழக்கில் இந்த நடவடிக்கையை அமலாக்கப்பிரிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

மும்பையில் உள்ள சந்தா கொச்சாருக்கு சொந்தமான வீடு, அவருடைய சில முதலீடுகள், பங்கு கள், அவரது கணவர் தீபக் கோச்சாரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக சந்தா கோச்சார் 2009-ம் பொறுப்பேற்றார். வீடியோகான் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் வேணுகோபால் தூத், சந்தா கொச்சார் கணவர் தீபக் கொச்சார் நடத்தி வந்த நியுபவர் ரினிவபிள் நிறுவனத்தின் பங்கு தாரர்களில் ஒருவர். 

தனது கணவருக்கு ஆதாயம் கிடைக்கும் நோக்கில் 2012-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியது. ஆனால், வீடியோகான் நிறுவனத்துக்கு தன் அதிகாரத்தைப் பயன் படுத்தி சந்தா கோச்சார் முறை கேடாக கடன் வழங்கியதாக வங்கியின் பங்குதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2018-ம் அக்டோபர் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் அவ்வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக தற்போது அமலாக்கத் துறை சந்தா கோச்சார் மற்றும் அவர் கணவர் தொடர்புடைய ரூ.78 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது.

click me!