புத்தாண்டுப் பரிசாக ரயில் கட்டணத்தை தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சி கொடுத்த மோடி அரசு... கடுப்பில் கழுவி ஊற்றும் பொதுமக்கள்..!

By vinoth kumarFirst Published Jan 1, 2020, 4:08 PM IST
Highlights

புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மானியம் இல்லா கேஸ் சிலிண்டர்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

புத்தாண்டு பிறப்பதற்கு முன்னரே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மானியம் இல்லா கேஸ் சிலிண்டர்களின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்துக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் இந்த மாதத்துக்கான கேஸ் சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த மாதத்தைக் காட்டிலும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக 5-வது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை உள்ள சிலிண்டரின் விலை 19 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டரின் விலை 734 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், டெல்லி மற்றும் மும்பையில், ஒரு சிலிண்டரின் விலை முறையே ரூ.19 மற்றும் ரூ.19.50-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு பின்னர் கேஸ் சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.714 ஆகவும், மும்பையில் ரூ.684.50 ஆகவும் உள்ளது. ஒரு காஸ் சிலிண்டர் கொல்கட்டாவில் ரூ.21.5 விலை உயர்த்தப்பட்டு ரூ.747-ஆக விற்பனையாகிறது. கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை மொத்தம் ரூ.140 விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!