பென்ஷன் தொகையை அதிகரிக்க மற்றொரு வாய்ப்பு! காலக்கெடுவை நீட்டித்து EPFO அறிவிப்பு

By SG Balan  |  First Published Jun 26, 2023, 10:23 PM IST

பதிவு செய்த தகுதி வாய்ந்த உறுப்பினர்கள் அதிக பென்சன் பெறுவதற்கு இபிஎப்ஓ (EPFO) இணையதளத்தில் ஜூலை 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


இபிஎப்ஓ (EPFO) உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் (ஜூன் 26ஆம் தேதி) முடிவடைகிறது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று புதிய காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎப்ஓ அமைப்பின் இணையதளத்தில் சமீபத்தில்தான் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

அதிக பென்ஷன்

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 2014ஆம் ஆண்டு தொழிலாளர் பென்சன் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவில் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு , தகுதிவாய்ந்த உறுப்பினர்கள் சேர்வதற்கு 4 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இபிஎப்ஓ உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெற விரும்போவோர், தங்கள் பணியாற்றும் நிறுவனத்துடன் இணைந்து, இபிஎஸ் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என கடந்த வாரம் அறிவித்தது. அதற்காக வழிகாட்டுதல்களையும் இபிஎப்ஓ வெளியிட்டது.

2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீரப்ப்பின்படி, ஓய்வூதியம் பெறுவதற்கான மாத ஊதிய அளவு ரூ.6500 இல் இருந்து, ரூ.15,000 ஆக உயர்த்தியது. ஊழியர்களும், நிறுவனமும் இணைந்து 8.33 சதவீதம் ஊதியத்தில் பங்களிப்பு செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

இதன்படி, இபிஎப்ஓ அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, “ தொழிலாளர்கள், தங்கள் பணியாற்றும் நிறுவனங்களுடன் இணைந்து, ஜாயின்ட் ஆப்ஷன் படிவத்தை தாக்கல் செய்யலாம். ஆன்லைனில் இதற்கான வசதி விரைவில் உருவாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதன்படி, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இபிஎப்ஓ இணையதளத்தில் அதிக ஓய்வூதியம் பெறுபவர்கள் விண்ணப்பிக்க தனியாக வசதிவிரைவில் தரப்படும். அவ்வாறு வசதி வரும்போது, ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பதிவு செய்ய வேண்டும், டிஜிட்டல் ரீதியாக லாக்கின் செய்தபின், விண்ணப்பம் சமர்பித்தலுக்கான எண்  வழங்கப்படும்.

அந்தந்த மண்டல பிஎப் அலுவலகத்தில் உள்ள இதற்குரிய அதிகாரி அதிக ஊதியம் மற்றும் கூட்டுவிருப்பம் தாக்கல் செய்திருந்தால் அதை ஆய்வு செய்து, தங்களின் முடிவை, விண்ணப்பதாரர்களுக்கு மின்அஞ்சல் அல்லது தபால் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்புவார்.

விண்ணப்பதாரரிடம் இருந்து ஏதேனும் குறைகள் இருந்தால், கூட்டுவிருப்ப மனு மற்றும் பேமென்ட் நிலுவை இருந்தால், அதை குறைதீர்ப்பு தளத்தில் பதிவு செய்யலாம். 

click me!