டிரம்பின் ஆட்டோ மொபைல் மீதான வரி இந்தியாவை பாதிக்குமா? டாடா மோட்டர்ஸ் பங்குகள் விலை சரிவு!!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல்கள் மற்றும் ஆட்டோ பாகங்கள் மீது 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

Donald Trump Auto tariffs impact india; Tata motors shares fall

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார். முக்கியமாக அமெரிக்காவுக்கு வருமானத்தை ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். உலகின் முதல் பொருளாதார நாடாகத் திகழும் அமெரிக்காவை தொடர்ந்து தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகிறார். 

வெனிசூலாவுக்கு டிரம்ப் மிரட்டல்:
கனடா, மெக்சிகோ நாடுகளை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்தும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறார். வெனிசூலா நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25% சதவீதம் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார். அதையும் மீறித்தான் கடந்த இரண்டு நாட்களாக கச்சா எண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை. எதிர்கால கணிப்பும் நன்றாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இது உலகப் போரை நோக்கை உலகம் செல்கிறதா என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

Latest Videos

டிம்ரப் வரி எப்போது அமலுக்கு வரும்:
ஆட்டோமொபைல் கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதியும், ஆட்டோ உதிரி பாகங்கள் மீதான வரி மே 3 ஆம் தேதியும் அமலுக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது. அதாவது, இறக்குமதி செய்யப்படும்  பயணிகள் வாகனங்களான செடான்கள், SUVகள், கிராஸ்ஓவர்கள், மினிவேன்கள் மற்றும் சரக்கு வேன்கள், இலகுரக லாரிகள், என்ஜின்கள், டிரான்ஸ்மிஷன்கள், பவர் டிரைன்ஸ் போன்ற பாகங்களுக்கும் புதிய கட்டணங்கள் பொருந்தும் என்று வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான அறிக்கை உறுதிபடுத்தியுள்ளது. 

எலான் மஸ்க் காருக்கு வரி இருக்கிறதா?
எலான் மஸ்க்கின் டெஸ்லாவிற்கு எந்த வரியும் இல்லை. அதாவது அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் கார்களுக்கு வரி விதிக்கப்படும். அதுவே, அமெரிக்காவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு இல்லை என்று ஏற்கனவே டிரம்ப் தெளிவுபடுத்தி இருந்தார். இந்த் வரி வசூலிப்பு அமெரிக்காவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்குதல் என்று தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை தீவிரம்; டிரம்ப் சொன்னது நடக்குமா?

பணப் பற்றாக்குறைக்கு அமெரிக்கா தள்ளப்படும் - ஆய்வாளர்கள் கணிப்பு: 
இது தற்காலிக முடக்கத்திற்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  பண பற்றாக்குறை, உற்பத்தி மற்றும் வருவாய் மட்டுமல்ல, அமெரிக்க வேலை வாய்ப்புகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளனர். இது மட்டுமல்ல உலகின் முக்கிய நாடுகளுடன் கசப்புணர்வு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் காரின் விலை விண்ணை முட்டுமா?
அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்பட 16 மில்லியன் கார்களில் பாதி விற்கப்பட்டு விட்டன. மீதம் இருக்கும் கார்களை விலை விண்ணை முட்டும் என்று கூறப்படுகிறது. கடந்தாண்டு இருக்குமதி செய்யப்பட்ட கார்களின் மதிப்பு 240 பில்லியன் டாலர் என்று தெரிய வந்துள்ளது.

டிரம்ப் வரியால் பாதிக்கப்படும் நாடுகள் எவை?
இந்த வரி அமெரிக்காவில் அசெம்பிள் செய்யப்பட்ட கார்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கும் இந்த வரி பொருந்தும். அனைத்து கார்களும் முழு அளவில் அமெரிக்காவில் தயாரிக்கப்படுவது இல்லை. உதிரி பாகங்கள் மெக்சிகோ, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. பல ஆண்டுகளாக மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே வரியில்லாத வர்த்தகம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அது தற்போது மீறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் F-47 போர் விமானம்! யாரும் கிட்டயே நெருங்க முடியாது!

 எஃகு மற்றும் அலுமினியம் மீதும் வரி:
இத்துடன் இல்லாமல், கார்கள் உற்பத்தி செய்ய  பயன்படுத்தப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான 25 சதவீத வரியை மறந்து விடக்கூடாது. இதுவும் விலை உயர்வுக்கு வழிய வகுக்கும்.  வரி உயர்வை அடுத்து மொத்தமாக, உற்பத்தி செலவு ஒரு காருக்கு 3,500 டாலர் முதல்12,000 ஆயிரம் டாலர் வரை உயரக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது கார்களின் விற்பனையை குறைக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதன் விளைவாக உற்பத்திக்கான தேவை குறைந்து, வேலை இழப்பு நிகழலாம். அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஹோண்டா, டொயோட்டா போன்ற கார் நிறுவனங்களும் பாதிக்கப்படும். 

டாடா மோட்டார்ஸ் பங்குகள் வீழ்ச்சி காரணம் என்ன?
இந்திய கார் உற்பத்தியாளர்களையும் டிரம்பின் வரி பாதிக்கும். இந்த அறிவிப்பினால்,  எடுத்துக்காட்டாக, டாடா மோட்டார்ஸின் பங்குகள் வியாழக்கிழமை அதிகாலை ஆறு சதவீதம் சரிந்தன. டாடாவின் கையில் அமெரிக்காவின் முக்கிய சந்தையாக இருக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர் பிராண்ட் உள்ளது. 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இந்தக் கார் தான் 20 சதவீதத்திற்கும் அதிகமாக விற்பனையானது. கடந்த ஆண்டு இந்திய நிறுவனங்கள் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான  ஆட்டோமொபைல் பாகங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து இருந்தன. 

டிரம்ப் வரியால் இந்தியாவுக்கு பாதிப்பா?
ஜப்பானிய நிறுவனமான நோமுராவின் அறிக்கையின்படி, நிதியாண்டு 2024-ல், வடஅமெரிக்காவுக்கு  வெளியே இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்த 97 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆட்டோ உதிரிபாகங்களில் இந்தியா வெறும் 3 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, மெக்சிகோ (22.8 சதவீதம்), ஜப்பான் (18.6 சதவீதம்), தென் கொரியா (17.3 சதவீதம்) மற்றும் கனடா (12.9 சதவீதம்) போன்ற நாடுகள் அமெரிக்காவின் முக்கிய வாகன இறக்குமதி கூட்டாளிகளாக உள்ளனர். அதனால், டிரம்பின் வரி விதிப்பு இந்தியாவை பெரிய அளவில் பாதிக்காது என்றே கூறப்படுகிறது.

vuukle one pixel image
click me!