இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்: டிரம்ப்பை ஓரம் கட்டிய கச்சா எண்ணெய்!!

இந்தியப் பங்குச் சந்தை இன்று ஏற்றம் கண்டுள்ளது, ஐடி மற்றும் வங்கித் துறைகளின் வளர்ச்சி முக்கிய காரணம். டிரம்ப் வரி விதிப்பு குறித்த அச்சம் இருந்தாலும், கச்சா எண்ணெய் விலை நிலையாக இருப்பதால் சந்தை உயர்வு பெற்றுள்ளது.

Indian stock market: Sensex, nifty higher 7th consecutive day

Sensex, Nifty today: இந்தியப் பங்குச் சந்தை இன்று ஏற்றம் கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இடம் பெற்று இருக்கும் சென்செக்ஸ் இன்றைய துவக்கத்தில் சுமார் 650 புள்ளிகள் அதிகரித்து 78,541 புள்ளிகளாக இருந்தது. நிப்டி 23,800 புள்ளிகளாக அதிகரித்து காணப்பட்டது.

இந்தியப் பங்குச் சந்தையின் இன்றைய உயர்வுக்கு காரணம் ஐடி துறைகளின் வளர்ச்சி, வங்கி, நிதித்துறை, இன்சூரன்ஸ் துறைகளின் வளர்ச்சியாகும். இருந்தபோதிலும், ஏப்ரல் மாதத்தில் இருந்து அமெரிக்க அதிபர் விதித்து இருக்கும் வரி விதிப்பு அமலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்ற அச்சமும் சந்தையில் நிலவி வருகிறது.

Latest Videos

இதற்கிடையில் தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரிக் கொள்கைகளை மீறியும் கச்சா எண்ணெய் விலை நிலையானதாக இருப்பதால் பங்குச் சந்தை இன்று ஏற்றம் கண்டுள்ளது. 

இன்று வாங்க வேண்டிய பங்குகள் என்ன? சந்தை நிபுணர்கள் டிப்ஸ்

டிரம்பின் வரி விதிப்பு ஏப்ரல் முதல் அமல்:
அமெரிக்காவுக்கு அதிகமான வரி விதிக்கும் நாடுகள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருந்தார். ஏப்ரல் மாதத்தில் இருந்து வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று தெரிவித்து இருந்தார். கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு அதிக வரி விதிக்கபப்டும் என்று அறிவித்து இருந்த டிரம்ப், ''இந்தியா போன்ற நட்பு நாடுகளும் இதற்கு விதிவிலக்கில்லை. அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் நாடு நட்பு நாடாக இருந்தாலும், அமெரிக்கா அந்த நாடுகளின் மீதும் வரி விதிக்கும்'' என்று தெளிவுபடுத்தி இருந்தார்.

வெனிசுலாவுக்கு டிரம்ப் மிரட்டல்:
இந்த நிலையில் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து இருந்தார். இதையும் மீறி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கச்சா எண்ணெய் தொடர்பான எதிர்காலம் நிலையாக இருந்தது. டிரம்பின் வரி விதிப்பு ஏப்ரல் 2 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் எதிர்கால கணிப்பு சாதகம்:
இன்று காலை (செவ்வாய்க்கிழமை) 9.56 மணியளவில், ஜூன் மாத கச்சா எண்ணெய் எதிர்கால கணிப்பு 0.01 சதவீதம் அதிகரித்து 72.38 டாலர் ஆகவும், WTI (வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்) மீதான மே மாத கச்சா எண்ணெய் எதிர்காலகணிப்பு 0.01 சதவீதம் அதிகரித்து 69.12 டாலராகவும் இருந்தன. 
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் துவக்கத்தில் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) ஏப்ரல் மாத கச்சா எண்ணெய் எதிர்கால கணிப்பு ரூ. 5,945 ஆக இருந்தது. முந்தைய வர்த்தகத்தின் இறுதியான ரூ. 5,931 உடன் ஒப்பிடும்போது 0.24 சதவீதம் அதிகமாகும். ரூ 5,917 உடன் ஒப்பிடும்போது மே மாத எதிர்கால கணிப்பு 0.29 சதவீதம் அதிகரித்து ரூ. 5,934 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டன.

ஜியோ காயின்: கிரிப்டோ சந்தையில் ஜியோவா? வேற லெவல் அப்டேட்

ஆட்டோமொபைல் மீது டிரம்ப் வரி விதிப்பு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்டோமொபைல் இறக்குமதி மீது புதிய வரிகள் விதிக்கப்படும் என்று சூசகமாக கூறியுள்ளார். இதனால் வர்த்தகப் போர் பேச்சு மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ள பரந்த "பரஸ்பர" வரிகளிலிருந்து சில நாடுகள் விலக்குகளைப் பெறக்கூடும் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன. ஏப்ரல் 2 ஆம் தேதி ஒரு பெரிய வர்த்தகக் கொள்கை மாற்றம் எதிர்பார்க்கப்படுவதால், வாகன உற்பத்தியாளர்கள் இன்று கவனம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு இருக்கலாம் என்ற நம்பிக்கையிலும் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் தான் அமெரிக்க அதிகாரிகளும் இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

vuukle one pixel image
click me!