
ஐபோன் மாடலும் சரி, அதன் விலையும் சரி பார்ப்பவர்களையும் கேட்பவர்களையும் அப்படியே ஆச்சரியப்படுத்தும். அதேபோல் ஐபோனை வாங்கி உபயோகிப்பவர்களுக்கு அது புதிய அனுபவத்தை கொடுக்கும். சொக்கவைக்கும் வகையில் அழகான வடிவமைப்பு, நவீன தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் திறன் மற்றும் பயனர் அனுபவத்தின் உச்சம் ஆகியவற்றால், Apple நிறுவனத்தின் iPhone உலகெங்கும் தனித்துவம் வாய்ந்த மொபைல் சாதனமாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் புதிய iPhone மாடல்கள், சந்தையில் பெரும் எதிர்பார்ப்பையும், தொழில்நுட்ப புரட்சியையும் உருவாக்குகின்றன.
iPhone-ன் முக்கிய சிறப்பம்சங்கள்
iPhone-னின் முக்கிய சிறப்பு அதன் இயங்குதளம் iOS. இது Apple நிறுவனத்தால் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முறைமையாக இருப்பதால், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் மிகவும் நம்பகமானதாகவும் இருப்பதுடன் பயன்பாடும் வேகமாக இருக்கிறது. App Store-ல் கிடைக்கும் செயலிகள் நன்கு பரிசோதிக்கப்பட்டவை. ஒவ்வொரு iPhone மாடலும், உயர்தர மெட்டீரியல் கொண்டு (அலுமினியம், சராமிக் ஷீல்டு, கண்ணாடி) தயாரிக்கப்படுகிறது. மயக்கும் வடிவமைப்பு, மென்மையான நிறங்கள், மற்றும் ஸ்லிம் ஸ்டைல், iPhone-க்கு தனி அடையாளமாக உள்ளது என்றால் அது மிகையல்ல. iPhone-ன் கேமரா அமைப்பு, குறிப்பாக Pro மாடல்களில், தொழில்முறை தரமான புகைப்படங்களை HD தரத்தில் எடுக்க உதவுகிறது. Night Mode, Cinematic Mode, Smart HDR, Deep Fusion போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் ஒளியின்மை இடங்களிலும் நுட்பமான படங்கள் எடுக்கலாம் என்பதால் போட்டோ தரம் சிறப்பாக இருக்கும். பாதுகாப்புக்காக iPhone-ல் கொண்டு வரப்பட்ட Face ID தொழில்நுட்பம் மற்றொரு சிறப்பம்சமாகும்.
கூடுதல் சிறப்புகள்
Face ID 3D facial mapping மூலம் துல்லியமான அடையாளம் காண்கிறது. சில மாடல்களில் நம்மை அசத்தும் வகையில் Touch ID-யும் இருக்கிறது.புதிய iPhone-களில் உள்ள MagSafe தொழில்நுட்பம், சார்ஜிங் மற்றும் accessories இணைப்புகளை மெக்னடிக் மூலம் எளிதாகவும், பாதுகாப்பாகவும் செய்கிறது. iPhone, iPad, MacBook, Apple Watch மற்றும் AirPods ஆகியவற்றுடன் நேரடி மற்றும் தீவிர இணைப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே Apple ID மூலம் அனைத்து சாதனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட முடிகிறது. iPhone-ல் Retina Display என்ற அழுத்தமான திரை தொழில்நுட்பம் பயன்படுகிறது. இது அதிக தீர்மானத்துடன் கூடிய, கண்களுக்கு ஏற்ற மற்றும் விழிக்கே இன்பமாக இருக்கும் திரைப் பாவனையை வழங்குகிறது.
வாடிக்கையாளர்களை வசப்படுத்திய சாதனம்
iPhone என்பது ஒரு சாதாரண மொபைல் சாதனம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை என்கின்றனர் அதனை வாடிக்கையாளர்கள். அதன் நம்பகத்தன்மை, செயல்திறன், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவை வாடிக்கையாளர்களை அப்படியே கட்டிப்போடுகின்றன. iPhone-ல் உள்ள தனித்துவமும், பல்லாயிரக்கணக்கான பயனாளர்களுக்கிடையே உண்டு பண்ணும் பொதுவான அனுபவமும், அதன் நிலைத்த வரவேற்பிற்கு அடித்தளமாக விளங்குகின்றன.
புதிய வரவுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்
இந்த நிலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, அப்பிள் நிறுவனத்தின் நீண்ட நாட்களாக பேசப்பட்ட வளைக்கக்கூடிய (foldable) ஐபோன் தற்போது கனவிலிருந்து நனவாக மாற இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சாம்சங் நிறுவனத்தின் Galaxy Z Fold மாதிரிகளை மையமாகக் கொண்டு பேசப்பட்ட Foldable concepts, இப்போது அப்பிள் தரப்பிலும் அமைய தொடங்கியுள்ளன.
உற்பத்தி எப்போது தொடக்கம்
பிரபல அனலிஸ்ட் மிங்-சி குவோவின் (Ming-Chi Kuo) புதிய தகவலின்படி, 2025ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டின் இறுதியில் அல்லது நான்காவது காலாண்டின் தொடக்கத்தில் அப்பிள் நிறுவனம் foldable iPhone உருவாக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல உற்பத்தியாளரான Foxconn நிறுவனம், இந்த திட்டத்தின் முதன்மை உற்பத்தி பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும், ஆரம்ப கட்ட டெவலப்ப்மென்ட் டெஸ்டிங் Q4 2025-இல் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிரடி வடிவமைப்பு:
5.5-இஞ்ச் + 7.8-இஞ்ச் டிஸ்பிளேவுடன் இந்த போன் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த foldable iPhone ஒரு டூயல் டிஸ்பிளே வடிவமைப்பில் உருவாகும். மடக்கப்பட்ட நிலையில் 5.5 இஞ்ச், திறந்த நிலையில் 7.8 இஞ்ச் அளவிற்கு டிஸ்பிளே பரந்து கிடைக்கும். புத்தக வடிவில் மடக்கப்படும் முறை இது.இது, Samsung Galaxy Z Fold மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். பெரிய திரை, multitasking, productivity பயன்பாடுகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டவுள்ளது.
Face IDக்கு பதிலாக Touch ID
இந்த மடிக்கக்கூடிய வடிவமைப்பில், Face ID-க்கு தேவையான இடம் இல்லாததால் Touch ID பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இது பவர் பட்டனில் அல்லது திரையின் கீழ் அடங்கும் வாய்ப்பு உள்ளது.
இதுதான் விலை
பரந்து விரிந்த திரை, வலைக்கக்கூடிய மெக்கானிசம் மற்றும் தொழில்நுட்ப நுட்பங்கள் காரணமாக, இது அப்பிள் நிறுவனத்தின் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் iPhone ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.
குறைந்தபட்சம்: $2,000 ( ₹1.65 லட்சம்)
அதிகபட்சம்: $2,500 ( ₹2 லட்சத்திற்கு மேல்)
சாம்சங் டிஸ்பிளே தயாரிப்பு
அப்பிளின் foldable iPhone-க்காக, Samsung Display சுமார் 7 முதல் 8 மில்லியன் டிஸ்பிளே யூனிட்கள் தயாரிக்க உள்ளது. மொத்தமாக, 15–20 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த foldable iPhone, அதிக விலை காரணமாக குறைந்த எண்ணிக்கியேலே விற்பனையடையாது என்பதால், 2–3 ஆண்டுகள் வரை ஒரே மாடலை வைத்துக்கொண்டு சுழற்சி செய்ய முடுவெடுக்கப்பட்டுள்ளதாகக கூறப்படுகிறது.
கூடுதல் அம்சங்கள்:
Apple நிறுவனம் தனது புதிய தலைமுறை foldable iPhone மூலம், மாடல் மாற்றத்திலும், டிசைன் சிந்தனையிலும் ஒரு புதிய அதிகாரப்பூர்வ கட்டத்திற்குச் செல்வதாக உள்ளது. இது, சாதாரண பயனாளர்களுக்கு இல்லை. ஆனால், தொழில்நுட்ப ஆர்வலர்கள், professionals, high-end users ஆகியோருக்கான புதிய இலாகா இதுவாக அமையும்.நாம் எதிர்பார்க்கும் நாள் அதிகம் தூரமில்லை. 2026 இரண்டாவது பாதியில், இந்த புதிய foldable iPhone உலக சந்தையை மிரள வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.