
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 15 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 265 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 74,120 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 122 ரூபாயாக உள்ளது. சர்வதேச பொருளாதார காரணங்களால் ஆபரணத்தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. முகூர்த்த தேதி காரணமாக தேவை அதிகரித்தததே இந்திய சந்தையில் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. சர்வதேச காரணங்களால் ஆசிய, ஐரோப்பிய சந்தைகளிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டது.
சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,250க்கு விற்பனை ஆகிறது.ஆனி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகமாக உள்ளதால், திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் ஆபரணங்களை வாங்க தொடங்கியுள்ளதால் உள்ளூர் சந்தைகளில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் தாக்கமும் தங்கத்தின் விலை அதிகரிக்க காரணம் என முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச காரணங்களும் தங்கமும்
சர்வதேச சந்தைகள் ஏற்ற இறக்கங்களை கொண்டு இருந்ததால் முதலீட்டாளர்கள் பங்கு சந்தை முதலீடுகளில் கவனம் செலுத்தாமல் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களில் முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்கத்தின் விலையில் சிறிது ஏற்றம் ஏற்பட்டது. இந்தியாவில் மூகூர்த்த நாட்கள் தொடங்கியுள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் நகைகள் உள்ளிட்டவற்றை வாங்க தொடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டது. திருமண சீசன் தொடங்கியுள்ளதால் சென்னை மதுரை கோவை நெல்லை உள்ளிட்ட இடங்களில் உள்ள நகைக்கடைகள் காலை நேரத்திலேயே பிசியாக காணப்பட்டது.
இன்றைய விலை இதுதான்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 15 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 265 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 74,120 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 122 ரூபாயாக உள்ளது. இந்தியாவையும் தங்கத்தின் சென்டிமென்டையும் பிரிக்கவே முடியாது என கூறும் சந்தை நிபுணர்கள், விலை அதிகரித்தாலும் குறைந்தாலும் வியாபாரம் சீராகவே இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
அள்ளிக்கொடுக்கும் வெள்ளி
வெள்ளியும் பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் வெள்ளி பார்களின் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறும் விற்பனையாளர்கள், எதிர்கால முதலீட்டுக்கு வெள்ளியிலும் முதலீடு செய்யலாம் என தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் வெள்ளியானது வெறும் 15% வருமானத்தை மட்டுமே கொடுத்துள்ளது. இதே கடந்த 10 ஆண்டுகளில் வெள்ளி 9% வளர்ச்சியைக் கண்டுள்ளது. தங்கமும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 2015 – 2020 வரையிலான கால கட்டத்தில், வெள்ளி விலையானது 14 – 19 டாலர்களுக்குள்ளாகவே காணப்பட்டது. ஏப்ரல் 2020-ல் இருந்து மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கிய வெள்ளி விலை, ஆகஸ்ட் 2020-க்குள்ளாகவே 28 டாலராக உச்சம் எட்டியது.
அப்பாடி வெள்ளியில் இவ்லோ லாபமா?
இது இந்திய ரூபாயில் பார்க்கும்போது அந்தச் சமயத்தில் ஒரு கிலோவுக்கு 75,000 ரூபாயாக இருந்த வெள்ளி தற்போது 1.10 லட்சம் ரூபாய்க்கு மேலாகக் காணப்படுகிறது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த வெள்ளியானது கடந்த 2022-ம் ஆண்டில் மீண்டும் 28 டாலரிலிருந்து 18 டாலருக்கு இறங்கியது. ஆனால், இன்றைய தேதியில் மீண்டும் 33 டாலரை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட இந்தக் காலகட்டத்தில் மட்டும் 77% லாபம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தங்கமோ வெள்ளியோ எதில் முதலீடு செய்தாலும் லாபம் கிடைக்கும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.