உங்கள் PF கணக்கில் உள்ள பணத்தை உடனே எடுக்க வேண்டுமா..? ரொம்ப ஈஸி..!

By thenmozhi gFirst Published Jan 3, 2019, 7:49 PM IST
Highlights

நாம் அலுவலகத்தில் பணியில் இருக்கும்போது மாதம் தோறும் பிடித்தம் செய்யப்படும் தொகையான employee provident fund (PF) நம்முடைய எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

உங்கள் PF கணக்கில் உள்ள பணத்தை உடனே எடுக்க வேண்டுமா..? 

நாம் அலுவலகத்தில் பணியில் இருக்கும்போது மாதம் தோறும் பிடித்தம் செய்யப்படும் தொகையான employee provident fund நம்முடைய எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

நாம் பணிபுரியும் அலுவலகத்தில் இருந்தும் நிறுவனத்தின் சார்பாகவும் நம்மிடம் இருந்தும் மாதம்தோறும் 12 சதவீதம் தொகையை மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. இதனை நாம் வேலையை விட்டு நின்று விட்டாலோ அல்லது ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது இடைப்பட்ட 2 மாதத்தில் வேலை எதுவும் இல்லாமல் இருந்தாலோ PF
தொகையிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் பிராவிடன்ட் ஃபண்ட் தொகையிலிருந்து நினைக்கும் நேரத்தில் பணத்தை எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் தற்போது தேவை ஏற்படும்போது, பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி வாங்க எந்தெந்த சமயத்தில் PF  பணத்தை எடுக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

வேலை இல்லாத பொழுது பிஎஃப் தொகையிலிருந்து 75 சதவீதம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வேலை இல்லை என்றால் மீதமுள்ள 25% தொகையை எடுத்துக் கொள்ளலாம். 

திருமணம்

PF தொகையிலிருந்து திருமணத்திற்காக 50 சதவீத தொகையை எடுத்துக் கொள்ளலாம். தன்னுடைய மகனுக்கோ மகளுக்கோ அல்லது உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது இந்த பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

கல்வி 

கல்வியைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பிற்கு  மேற்பட்ட உயர் கல்வியை மேற்கொள்ளும் போதும் அல்லது தாமே ஏதாவது உயர்கல்வியை மேற்கொள்ளும்போதும் 50 சதவீத தொகையை PF லிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

இதற்காக குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் ஆவது PF தொகை பிடித்தம் செய்திருக்க வேண்டும். அதாவது ஏழு வருடங்களாவது வேலை செய்திருக்க வேண்டும்.

வீட்டு மனை அல்லது வீடு கட்டுதல்:

புதிய வீட்டுமனை பட்டா வாங்கும் போதோ அல்லது புதிய வீடு கட்டும் போதோ அதற்கு தேவையான பணத்தை PF தொகையிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இதற்காக குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது பணிபுரிந்திருக்க வேண்டும்.

வங்கி கடனை அடைத்தல்:

குறைந்தது 10 ஆண்டுகள் வேலை செய்திருந்தால் அப்போது பிடித்தம் செய்திருக்கும் PF தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வங்கி கடனை அடைக்கலாம். இதேபோன்று மறுசீரமைக்கும் போதும் தேவைப்பட்டால் PF தொகையில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் அவசர சிகிச்சையின் போதும் மருத்துவ செலவிற்காக தேவையான தொகையை எடுத்துக் கொள்ளலாம். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்முடைய ஆறு மாத சம்பள தொகையை மருத்துவ செலவிற்காக எடுத்துக்கொள்ள முடியும்.  

click me!