50 ஆயிரத்திற்கு மேல் பரிவர்த்தனையா ? வருகிறது புதிய வரி : மத்திய அரசு அதிரடி ...!

 
Published : Jan 25, 2017, 04:17 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
50 ஆயிரத்திற்கு  மேல்  பரிவர்த்தனையா ?  வருகிறது  புதிய  வரி : மத்திய அரசு  அதிரடி ...!

சுருக்கம்

மத்தியில் ஆளும் பாஜக  அரசு,  ஆரம்பத்திலிருந்தே பணமில்லா பரிவர்த்தனையை  ஊக்குவிக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது,  ரொக்க  பண  பரிவர்த்தனையை குறைக்கும்  பொருட்டு , ஒரு குறிப்பிட்ட  அளவுக்கு  மேல்  பண  பரிவர்த்தனை மேற்கொண்டால்  வரி  விதிக்க மத்திய  அரசு   முடிவு செய்துள்ளது.

டஜிட்டல்  பரிவர்த்தனை :

பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை  நடைமுறைக்கு  கொண்டுவர, அதாவது   பணமில்லாத  பொருளாதாரத்தை  மேம்படுத்த  ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு   நாயுடு  தலைமையிலான  நிபுணர்  க குழு அமைக்கப்பட்டது.

ஆய்வு :

இந்த  குழு மேற்கொண்ட ஆய்வின் படி, 50  ஆயிரத்திற்கும் மேலான,  ரொக்க பரிவர்த்தனை மேற்கொண்டால் , ஒரு குறிப்பிட்ட தொகையை  வரியாய் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சலுகை :

ஆன்லைன் வழியாக மேற்கொள்ளும்,  பண பரிவர்த்தனைக்கு  சில சலுகைகள் வழங்கவும் , ஸ்மார்ட்ஃபோன் வாங்க விரும்புவோருக்கு, ரூ.ஆயிரம் வரை விலைச் சலுகை வழங்கவும்  பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது.

சந்திரபாபு  நாயுடு  பிரதமர்  சந்திப்பு :

ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு  நாயுடு , குழு நிபுணர்களுடன் நேற்று  பிரதமரை  சந்தித்து , இதற்கான  திட்டத்தை  வெளிப்படுத்தினார். இதற்கான  அதிகார   பூர்வ  அறிவிப்பை  , மத்திய  நிதியமைச்சகம்  விரைவில்  வெளியிடும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கும்  துறைகள் :

இதன்  விளைவாக , ரியல் எஸ்டேட், சிறு வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்  செய்திகள் வெளியாகி உள்ளது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ரயில் கட்டணம் உயர்வு.. இனி சென்னை டூ கோவை, மதுரை, நெல்லை, பெங்களூருக்கு டிக்கெட் எவ்வளவு?
ரயில் டிக்கெட் விலை உயர்வு.. டிசம்பர் 26 முதல் அமல்.. அதிர்ச்சியில் பயணிகள்.. எவ்வளவு தெரியுமா?