வங்கியில் கள்ள நோட்டு டெபாசிட்  செய்யப்பட்டதா? தெரியவே தெரியாது என்கிறது ரிசர்வ் வங்கி

First Published Jan 24, 2017, 7:20 PM IST
Highlights


ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியான காலத்தில் வங்கிகளில் கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டதா?, கண்டுபிடிக்கப்பட்டதா ? என்பது குறித்து எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 ரூபாய் நோட்டுதடை அறிவிப்பு காலத்தில் 2016, நவம்பர் 9-ந்தேதியில் இருந்து, டிசம்பர் 10-ந்தேதி வரை ரூ.1000, ரூ.500 நோட்டுகளில் கள்ள நோட்டுகள் எவ்வளவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டன, அவற்றின் மதிப்பு என்ன?, எண்ணிக்கை எவ்வளவு?  என்பது குறித்து மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அணில் கால்காலி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்து இருந்தார்.

இதற்கு ரிசர்வ் வங்கி தரப்பில், “ ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு காலத்தில், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூபாய்களில் கள்ள நோட்டுகள் எவ்வளவுடெபாசிட் செய்யப்பட்டன என்பது குறித்து ஆதாரங்கள், தகவல் ஏதும் இல்லை'' எனத் தெரிவித்துள்ளது.

click me!