Crude oil: கவனம்! நுகர்வோர் பொருட்கள் விலை 30% அதிகரிக்க வாய்ப்பு? காரணம் என்ன?

By Pothy RajFirst Published Mar 9, 2022, 11:37 AM IST
Highlights

Crude oil : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும், உள்ளீட்டுச் செலவு காரமமாகவும் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள்(FMCG) விற்பனை 20 முதல் 30 சதவீதம் வரை வரும் நாட்களில் உயரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும், உள்ளீட்டுச் செலவு காரமமாகவும் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள்(FMCG) விற்பனை 20 முதல் 30 சதவீதம் வரை வரும் நாட்களில் உயரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் ரஷ்யா போர்

ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரால் ஐரோப்பிய, அமெரிக்காவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சியதால் விலை பேரல் 140 டாலராக உயர்ந்தது. இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவில் தாக்கம்

இந்தியாவிலும் இந்த விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை உயர்வாக எதிரொலிக்கும். அவ்வாறு விலை உயரும் போது, போக்குவரத்துச்செலவு, பொருட்களை பேக்கிங் செய்யும் செலவு போன்றவை அதிகரிக்கும்போது, அது பொருட்களின் விலையிலும்அதிகரிக்கும். இறுதியாக நுகர்வோர்கள் அதிகமான விலை கொடுக்க நேரிடும்.

செலவு உயரும்

பேக்கேஜ் பிரிவில் பிரதானமாக இருப்பது பிளாஸ்டிக்தான். இந்த பிளாஸ்டி உருவாக்கத்தில் மூலப்பொருளாக இருப்பது கச்சா எண்ணெய். ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இயல்பாகவே பேக்கேஜ் செய்யக்கூடிய பொருட்களுக்கான செலவு அதிகரிக்கும். 

 

விலைவாசி அதிகரிக்கும்

இதுகுறித்து பார்லி நிறுவனத்தின் விற்பனைப்பிரிவின் மூத்த அதிகாரி மயங்க் ஷா கூறுகைியல் “ ஒரு பொருளுக்கான உற்பத்திச் செலவில் 40 சதவீதம் பேக்கேஜிங் செலவில் அடங்கிவிடுகிறது. அதிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மூலப்பொருளாக இருக்கும் கச்சா எண்ணெய் விலை உயர்வு பேக்கேஜிங் பிரிவில் வரும் நாட்களில் எதிரொலிக்கும். இதனால் பொருட்களின் விலை வரும்வாரங்களில் 15 முதல் 20 சதவீதம் வரை உயரக்கூடும்.

பெட்ரோல், டீசல் விலை இதுவரை இந்தியாவில் உயர்த்தப்படவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களில் விலை உயர்ந்தால்,பொருட்களுக்கான போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும். இந்த விலை உயர்வை வேறுவழியில்லாமல் நுகர்வோர் மீதுதான் சுமத்தவேண்டியதிருக்கும்” எனத் தெரிவித்தார்

சமையல் எண்ணெய்

சூர்யகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், பருத்திவிதை எண்ணெய் போன்றவை 70 சதவீதம் ரஷ்யா, உக்ரைனிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போரால், சோயா எண்ணெய், சூர்யகாந்தி எண்ணெய், பாமாயில், ஆகியவற்றின் விலையும் 18 முதல் 20 சதவீதம் வரைவரும் நாட்களில் உயரும் அச்சம் இருக்கிறது

30% அதிகரிக்கலாம்

இதுகுறித்து அனைத்து இந்திய சமையல்எண்ணெய் வர்த்தகப்பிரிவின் தலைவர் சங்கர் தக்கார் கூறுகையில் “ நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் சூர்யகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், பாமாயில், பருத்திவிதை எண்ணெய் ஆகியை 70 சதவீதம் இறக்குமதி மூலம்தான் தேவையை நிறைவு செய்கிறோம். ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்கிறோம். ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான போரால், சமையல் எண்ணெய் விலை 18 முதல் 20 சதவீதம் வரை வரும் வாரங்களில் உயரக்கூடும். கடந்த ஆண்டிலும் இதேபோன்று பொருட்களை பேக்கிங் செய்யும் பேக்கேஜிங் கட்டண் 30 சதவீதம் உயர்ந்தது, போக்குவரத்து கட்டணம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் சமையல் எண்ணெய் விலை 100 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 

உள்ளீட்டுப் பொருட்கள் விலை உயர்வால் வேறு வழியில்லாமல் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியதிருக்கிறது. கடந்த 6 மாதத்தில் 20 முதல் 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்

click me!