உலக வரலாற்றில் முதன் முறையாக சரிவு... விலையை குறைக்காத கல்மனம் கொண்ட மத்திய அரசு..!

By Thiraviaraj RMFirst Published Apr 21, 2020, 11:00 AM IST
Highlights

வாகனங்களின் பயன்பாடு குறைந்துள்ளதால் கச்சா எண்ணெயின் விலை பூஜ்யம் டாலருக்குக் கீழே சென்றுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக கச்சா எண்ணெய் விலை பூஜ்யம் டாலருக்கு கீழே சென்றுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கொரோனா காரணமாக போக்குவரத்து முழுமையாகக் குறைந்துள்ளது. வாகனங்களின் பயல்பாடு குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய்யின் விலை பூஜ்யம் டாலருக்குக் கீழே சென்றுள்ளது.

கொரொனா வைரஸ் பீதி இப்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 25,00,000 க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் உலகளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரிதாக அடிவாங்கியுள்ளது கச்சா எண்ணெய்யின் விலைதான்.

கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்துவந்த கச்சா எண்ணெய்யின் விலை தற்போது பூஜ்யம் ரூபாய்க்கு கீழே சென்றுள்ளது. அதாவது கச்சா எண்ணெய்யையும் கொடுத்து அதை எடுத்து செய்ய டாலரையும் கொடுக்க தயாராக உள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.

கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகமாய் இருந்தும், விற்பனை இல்லாததால் டபில்ஸ்யூடிஐ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு பூஜ்ஜியத்துக்கும் கீழ் குறைந்து -39.14 அமெரிக்க டாலர்களாக மாறியுள்ளது. கச்சா எண்ணெய் வரலாற்றிலேயே அதன் மதிப்பு பூஜ்ஜியத்திற்கும் கீழ் சென்றிருப்பது இதுவே முதல்முறை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்காமல் வரியை ஏற்றிஉள்ளது மத்திய அரசு. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.

click me!