crude oil price: ரஷ்யாவிடம் 20லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொள்முதல்: ஐஓசியைத் தொடர்ந்து ஹெச்பியும் முடிவு

Published : Mar 17, 2022, 05:48 PM IST
crude oil price: ரஷ்யாவிடம் 20லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொள்முதல்: ஐஓசியைத் தொடர்ந்து ஹெச்பியும் முடிவு

சுருக்கம்

crude oil price:இந்தியன் ஆயில் நிறுவனத்தைத் தொடர்ந்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும் ரஷ்யாவிடம் இருந்து 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்ய இருக்கிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தைத் தொடர்ந்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும் ரஷ்யாவிடம் இருந்து 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்ய இருக்கிறது.

இந்துஸ்தான் பெட்ரோலியம்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை ஐரோப்பிய வர்த்தக நிறுவனமான விடால் நிறுவனம் மூலம் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் கொள்முதல்செய்ய இருக்கிறது

இது தவிர மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிகல்ஸ் நிறுவனமும், 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்க டெண்டர் கோரியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைவிதித்தன. கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யவும் தடைவிதிக்கப்பட்டது.

சலுகை விலை

இதையடுத்து, ரஷ்யா தன்நாட்டிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயை நட்புநாடுகளுக்கு மிகக்குறைந்த விலையில், சலுகையில் விற்பனை செய்ய முன்வந்தது. இதனால் இந்தியாவில் இந்தியன் ஆயில் நிறுவனம் தள்ளுபடி விலையில் 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து வாங்க முடிவு செய்தது. 

வழக்கமான சந்தை விலையிலிருந்து பேரல் ஒன்றுக்கு 20 முதல் 25 டாலர் வரை குறைவாக இந்தியன் ஆயில்நிறுவனத்துக்கு ரஷ்யா கச்சா எண்ணெய் வழங்கஉள்ளது. 

20ல ட்சம் பேரல்

இதைத் தொடர்ந்து இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுனமும்ரஷ்யாவிடம் இருந்து 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது. வரும் மே மாதத்திலிருந்து இறக்குமதி செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ரிலையன்ஸ் தவிர்ப்பு

ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைஇருப்பதால், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்காமல் ஒதுங்கியே இருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கினால் ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறுநாடுகளில், நாடுகளில் உள்ள நிறுவனங்கள் முதலீட்டில் நடத்தும் வர்த்தகம் பாதிக்கும் என்பதால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கவில்லை.

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் துணை நிறுவனமான மங்களூரு பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடட் நிறுவனமும் ரஷ்யாவிடம் இருந்து 10லட்சம் பேரல் எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!