upi lite:வந்துவிட்டது ‘UPI Lite’: இன்டர்நெட் இல்லாமல், சிறியபணப்பரிமாற்றம்: முழுவிவரங்கள் இதோ

Published : Mar 17, 2022, 05:07 PM ISTUpdated : Mar 17, 2022, 05:10 PM IST
upi lite:வந்துவிட்டது ‘UPI Lite’: இன்டர்நெட் இல்லாமல், சிறியபணப்பரிமாற்றம்: முழுவிவரங்கள் இதோ

சுருக்கம்

upi lite: சிறியஅளவிலான பணப்பரிமாற்றத்தை மொபைலில் இன்டர்நெட் இல்லாமல் செய்யும் “யுபிஐ லைட்”(upilite) எனும் செயலியை தேசிய பேமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா(NPCI) அறிமுகப்படுத்த உள்ளது.

சிறியஅளவிலான பணப்பரிமாற்றத்தை மொபைலில் இன்டர்நெட் இல்லாமல் செய்யும் “யுபிஐ லைட்”(upilite) எனும் செயலியை தேசிய பேமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா(NPCI) அறிமுகப்படுத்த உள்ளது.

பணப்பரிமாற்றத்தை எளிமைப்படுத் வேண்டும், வங்கி செயல்பாட்டு முறைக்கு இருக்கும் அழுத்தத்தை குறைக்கவும் இந்த யுபிஐ லைட் கொண்டுவரப்பட உள்ளது. 

இன்டர்நெட் இணைப்பு வேண்டாம்

இதுகுறித்து எபிசிஐ வங்கிகளுக்கு விடுத்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மொபைல் போனில் இன்டர்நெட் வசதியில்லாத ஆஃப்லைன் மோடில் பணத்தை டெபிட் செய்யவும், இன்டர்நெட் இணைப்புடன் பணத்தை கிரெடிட் செய்யவும் யுபிஐ லைட் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முயற்சி சிறப்பான முடிவுகளைத் தரும்பட்ச்தில் பணத்தை பெறுதல், பணத்தை அனுப்புதல் இவை இரண்டையும் ஆஃப்லைனில் அதாவது இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் செய்ய முடியும்.

பரிசோதனை முயற்சி

முதல்கட்டமாக யுபிஐ லைட் செயலி பரிசோதனை முயற்சியாக பல்வேறு வங்கிகளுடன் கூட்டாக இணைந்து அறிமுகப்படுத்தப்படும். இந்த பரிசோதனை முயற்சியில் வங்கிப்பரிமாற்றம் சிக்கலின்றி அமைந்துவிட்டால் வர்த்தகரீதியான அறிமுகம் முறைப்படி தொடங்கும்

இன்டர்நெட் இல்லாமல் பரிமாற்றம் செய்யும்போது அதிகபட்சமா ரூ.200 வரை மட்டுமே அனுப்ப முடியும். ஆன்-டைவைஸ் வேலட்டில்  அதிகபட்சமாக ரூ.2ஆயிரம் வரை மட்டுமே பணம் வைக்க முடியும். 

குறைந்த பணம்

யுபிஏ பேமெண்ட் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தியவகையில் 75சதவீத சில்லரை பரிமாற்றத்தின் மதிப்பு இந்தியாவில் ரூ.100க்கும் கீழாகத்தான் இருக்கிறது. இதனால், யுபிஐ பரிமாற்றத்தின் மதிப்புரூ.200ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ லைட்டை ஒருவர் மொபைல் போனில் பதிவேற்றம் செய்துவிட்டால், அவரின் வங்கிக்கணக்கிலிருந்து வாலட்டுக்கு ரூ2ஆயிரம்வரை வைக்கலாம்.

எப்படிஅனுப்பலாம்

 இந்தப் பணத்தை வங்கிக்கணக்கிலிருந்து வாலட்டுக்கு மாற்றும்போது மொபைலில் இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். ஆனால், பணம் அனுப்பும்போது, இன்டர்நெட் தேவையில்லை. 

யுபிஐ லைட் செயலி கூடுதல் பாதுகாப்புவசதி அதாவதுஓடிபி வசதியுடனும், பின்நம்பர் இல்லாமல் பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டிருக்கும். அதாவது செல்போனில் இருக்கும் பயோமெட்ரிக் முறை, செயலிக்கான பாஸ்வேர்ட் ஆகியவற்றை வைத்து பணம் அனுப்ப முடியும். 

ஒருவேளை பணம் அனுப்பும்போது, ஓடிபி வசதியுடன் பாதுகாப்பாக அனுப்ப வேண்டுமென்றால் இன்டர்நெட் வசதியை அதாவது டேட்டாவை ஆன் செய்து, ஒடிபி பெற்று அனுப்பலாம். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு யுபிஐ பேமெண்ட் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. 2022, பிப்ரவரி மாதம் வரை 452.74கோடி பேமெண்ட் நடந்துள்ளது, இதன்மிப்பு ரூ.8.26 லட்சம் கோடியாகும். அடுத்த 5 ஆண்டுகளில் தினசரி100 கோடி பரிமாற்றம் நடக்க வேண்டும் என்பதை என்பிசிஐ இலக்காக வைத்துள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!