Credit Card செலவு: வருமானவரி Notice வரும் ஜாக்கிரதை!

Published : Jun 18, 2025, 11:46 AM IST
new tax regime benifit

சுருக்கம்

கிரெடிட் கார்டு செலவுகள் வருமானத்தை விட அதிகமாக இருந்தால், வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது. சரியான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.

வருமானவரி குறித்த விழிப்புணர்வு அவசியம்

வருமானத்திற்கு மட்டும் வரிக்கட்டிவிட்டால் பத்தாது, நாம் செய்யும் செலவுகளும் வருமானத்தில் சேர்ந்துகொள்ளும் என்பது பலருக்கு தெரிவதில்லை. நம் வங்கிகணக்கில் யாரேனும் பணம் செலுத்தினால் கூட அதற்கு சரியான ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது கட்டாயம். வங்கி கணக்கில் ஆயிரக்கணக்கில் பணம் வந்து சென்றால் கூட அதனை முறைப்படுத்தி ஆவணப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். கிரெடிட் கார்டுகள் வழியே ஆபர்களை பயன்படுத்தி செலவுசெய்யும் ஒருவர் அதனை சரியாக மதிப்பீடு செய்து வருமான வரி தாக்கல் செய்யும் போது குறிப்பிட வேண்டும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

எல்லா வருமானத்திற்கும் கணக்கு காட்ட வேண்டும்

நமக்கு மாதம் மாதம் வரும் சம்பளத்தை மட்டும் கணக்கில் கொண்டு வருமான வரி தாக்கல் செய்துவிட்டு, நமது ஆண்டு வருமானத்தை விட அதிக தொகையை கிரெடிட் கார்டில் செலவு செய்திருந்தால் கட்டாயம் சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் அதற்காக அபராதம் கட்டும் சூழலும் ஏற்படும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் சிலர் நிறுவனம் வழங்கும் ஆபர்களை சரியாக பயன்படுத்தி பில் தொகையையும் சரியாக கட்டிவந்தாலும், அதனை வருமானவரி தாங்கல் செய்யும் போது குறிப்பிடுவது நல்லது என்றும் பல சிக்கல்களில் இருந்து நம்மை காப்பாற்றும் எனவும் பொருளாதார ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது போல் நடக்கும் ஜாக்கிரதை

ஒருவர் வருமான வரி தாக்கல் (ITR) செய்யும் போது ரூ.6.5 லட்சம் மட்டுமே வருமானமாக கட்டியுள்ளார். ஆனால், அவர் கிரெடிட் கார்டு மூலம் செலவிட்ட தொகை ரூ.10 லட்சத்தைக் கடந்துவிட்டது என்பதால் அவருக்கு வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தது. இந்த மாதம் 1 லட்சம் ரூபாய் செலவிடுங்கள் 2,000 ரிவார்ட் பாயிண்ட் கிடைக்கும் என வங்கியிடம் இருந்து குறுந்தகவல் வந்தவுடன் அதனை உபயோகமாக செலவிட்டு வந்ததாகவும், தான் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை செலவிட்டதையும் அவர் ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால் அந்த வாடிக்கையாளர் அனைத்து நிலுவை தொகைகளையும் நேரத்தில் கட்டி வந்தார்.

தொகை நிலுவை இல்லை. கடன் இல்லை. இதனை ஒரு விதத்தில் புத்திசாலித்தனமான நிதி ஒழுங்கு என வைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில், ஆனால் அவரின் வருமான வரி தாக்கலில் காட்டிய வருட வருமானம் ₹6.5 லட்சம்தான். இது பார்ப்பதற்கு, அவர் வருமானத்தைவிட இரட்டிப்பு அளவுக்கு செலவு செய்துள்ளார் என தெரிவதால் பிரச்சினை எழுந்தது.

இதுதான் பிரச்சினை

இது போல வருமானம் மற்றும் செலவுகளுக்கிடையே பெரும் வித்தியாசங்கள் இருந்தால்,

AI பின்புலம் கொண்ட வருமான வரித் துறை அல்கோரிதம் அதை உடனே கண்டுபிடிக்கிறது.

இதன் காரணமாக அவர் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது:

  •  அந்த கூடுதல் பணம் எங்கிருந்து வந்தது?
  • அவர் வருமானத்தைவிட அதிகமாக செலவழிக்க காரணம் என்ன?
  • அவர் வாழும் வாழ்க்கைமுறை, வருமானத்துடன் எப்படி பொருந்துகிறது?

இது குறித்த விரிவான விதி வருமான வரி சட்டத்தில் நேரடியாக இல்லை.ஆனால் நிபுணர்கள் மற்றும் சிஏக்கள் (Charted Accountants) பரிந்துரைக்கின்ற பொதுவான நடைமுறை என்னவென்றால்: வாராகிய நிதி பரிமாற்றங்கள் (Specified Financial Transactions - SFT) என்ற பிரிவின் கீழ், ஒரு நபர் வருடத்திற்கு ₹10 லட்சத்திற்கும் மேல் கிரெடிட் கார்டில் செலவு செய்தால், அவரது கணக்கு flag ஆகும்.

Flag ஆன பிறகு:

  • உங்கள் செலவுகள் மற்றும் ITR வருமானம் இணைக்கப்படுகிறது
  • பெரும் வித்தியாசங்கள் இருப்பதை கணினி கண்காணிக்கிறது
  • அதன் அடிப்படையில், விசாரணை அல்லது நோட்டீஸ் வரும்

நீங்கள் தவறு செய்யவில்லை என்றாலும் கூட:

  • சரியான ஆவணங்கள் இல்லாமல் இருந்தால்,
  • தவறான அறிவிப்பு அல்லது கணக்கீட்டால்,
  •  நீங்கள் "Income from Other Sources" எனப்படும் வருமானக் குட்பிரிவில் சேர்க்கப்பட்டு,தண்டனைகள் போன்றவையுடன் விரிவான விசாரணைக்குள்ளாகலாம்.

பயனாளர் செய்தவையும், செய்யாததும்:

  • பல செலவுகள் அவர் பணியிடத்தின் சார்பாக செய்யப்பட்டவை — பின்னர் நிறுவனத்தால் reimburse செய்யப்பட்டன.
  • சில செலவுகள் குடும்ப உறுப்பினர்களுக்காக, ஆனால் அவர் கார்டில் செலுத்தப்பட்டு, பிறகு அவர்கள் பணம் திருப்பிக் கொடுத்தனர்.
  • ஆனால் அவர் இவை குறித்த தெளிவான பதிவு வைத்திருக்கவில்லை மற்றும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

நோட்டீஸ் வந்தவுடன் இதனை செய்யவது கட்டாயம்

இதுபோன்ற பிரச்சினையில் வருமானவரி நோட்டீஸ் வந்தவுடன், உடனடியாக நிறுவன செலவுகளுக்கான reimbursement சான்றுகள் வழங்க வேண்டும் என்பதை கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும். தனிப்பட்ட மற்றும் குடும்பச் செலவுகளின் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தனிப்பட்ட செலவுகளுக்கான மூல வருமானத்தை விளக்க வேண்டியது அவசியம்.

இன்றைய நவீன நிதி சூழலில், கிரெடிட் கார்டுகள், யூபிஐ மற்றும் ஆன்லைன் டிரான்ஸ்ஷக்ஷன்களின் வசதியால் நம்முடைய செலவுகள் கணக்கில் தெரியாமல் அதிகரிக்கின்றன. ஆனால் இந்த செலவுகள் நம் வருமானத்துடன் பொருந்தாவிட்டால், வருமான வரித்துறையிடமிருந்து கேள்விகள் எழுந்து நோட்டீஸ் வர வாய்ப்பு அதிகம்.

இந்திய வருமானவரி சட்டத்தின் கீழ், ஒரு நபர் தனது எல்லா வருமானங்களையும் நேர்மையாகக் காட்டி வரி செலுத்த வேண்டிய கடமை உள்ளார். ஆனால், சிலர் பிழையாகவோ அல்லது திட்டமிட்ட வகையில் போலியாகவோ சில வருமானங்களை மறைத்துவைக்கிறார்கள். இதற்குப் Undisclosed Income / Concealed Income என்று பெயர். இது ஒரு கடும் குற்றமாக கருதப்படுகிறது.இங்கே, வருமானத்தை காட்டாததற்கான தண்டனைகள், சட்டங்கள் மற்றும் விளைவுகள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது:

நீங்கள் ITR-ல் காட்டவேண்டிய வருமானம் இதுபோன்றவை:

சம்பளம், வியாபார / தொழில் வருமானம், வாடகை (Rent) வருமானம், பங்கு/முதலீட்டு லாபம்,வங்கி வட்டி, பரிசாக கிடைக்கும் தொகை (கட்டுப்பாடுகளுடன்), UPI/பேங்க் மூலம் வந்த பெரிய தொகைகள், சொத்து விற்பனையில் கிடைத்த லாபம், பிற நிதி உதவிகள்இந்த வருமானங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் மறைத்தால், அது “அறிக்கையிடாத வருமானம்” ஆகும்.

வருமானத்தை மறைத்தால் என்ன நடக்கும்?

வருமானத்தை குறைவாகக் காட்டினால் (Under-reporting) 50% வரை வரி தொகைக்கு மேலாகத் தண்டனை வழங்கப்படும், பொய்யாக தகவல் கொடுத்தால் (Misreporting) 200% வரை வரி தொகைக்கு மேலாகத் தண்டனை கிடைக்கும்.

Scrutiny / Detailed Assessment:

வருமான வரித்துறை உங்களை scrutinyக்கு அழைக்கும்,Bank account, credit card, property records எல்லாம் பரிசோதிக்கப்படும், உங்கள் எதிர்கால வரி தாக்கல்களில் கூடுதல் கண்காணிப்பு இருக்கும்

Section 271AAC – Unexplained Income or Investments:

உங்கள் வங்கி கணக்கில் இருந்து அறியமுடியாத (unexplained) பணம் இருந்தால்:

அதற்காக 60% வரி

கூடுதலாக 25% surcharge

மேலும் 4% cess

மொத்தம்: 78% வரை வரி கட்ட வேண்டிய நிலை

Search & Seizure (IT Raid):

வருமானத்தை நம்பிக்கையுடன் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்

IT department உங்கள் வீட்டில் / அலுவலகத்தில் சோதனை நடத்தலாம்

பணம், ஆவணங்கள், சொத்துகள் பறிமுதல் செய்யப்படலாம்

Prosecution (சட்ட நடவடிக்கை):

Section 276C – Intentional Tax Evasion என்ற குற்றத்திற்கு:

மறைக்கப்பட்ட வருமான அளவு சிறைத்தண்டனை

₹25 லட்சத்திற்கு மேல் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை

₹25 லட்சத்திற்குள் 3 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை

மாறாக, நீங்கள் தவறுதலாக மறைத்திருந்தால் என்ன செய்யலாம்?

Revised ITR தாக்கல் செய்யலாம்– வருமானம் தவறாக விடுபட்டிருந்தால், நேரத்திற்குள் திருத்தி மீண்டும் தாக்கல் செய்யலாம். Voluntary Disclosure (சுய அறிவிப்பு):– தாங்களாகவே வருமானத்தை உண்மையாக தெரிவித்து வரி செலுத்தினால், தண்டனை குறைவாக இருக்கலாம்.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு