மோடியின் அடுத்த அதிரடி..!  “ஆபரேஷன் க்ளீன் மணி 2.௦”..! ஆப்பு வைக்க லிஸ்ட்  ரெடி..!

 
Published : Apr 25, 2017, 11:03 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
மோடியின் அடுத்த அதிரடி..!  “ஆபரேஷன் க்ளீன் மணி 2.௦”..! ஆப்பு வைக்க லிஸ்ட்  ரெடி..!

சுருக்கம்

clean money 2.0

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8  ஆம் தேதி, உயர் மதிப்பு கொண்டு ரூபாய் தாளான 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது .

இதனை தொடர்ந்து, மக்கள் தங்கள் கையில் இருந்த அனைத்து பணத்தையும் வங்கி கணக்கில் டெபாசிட்செய்தனர்.இதனை தொடர்ந்து பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை   செய்ய தொடங்கியுள்ளனர்.

இதனிடேயே, பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில்,வங்கியில் செலுத்தப்பட்ட பணத்தில்,  நியாயமான முறையில் சேர்க்கப்பட்ட  சுத்தமான பணம் எது என்பதை கண்டுப்பிடிக்க சொல்லப்படும்  வார்த்தையே  “கிளீன் மணி”  எனப்படும்.

 “”கிளீன் மணி"

ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை டெபாசிட் செய்தவர்களிடம்,  விசாரணை நடத்தப் பட  உள்ளது. அதன் படி,   பண நீக்கம்  நடவடிக்கை  எடுத்த பின்னர் , வங்கியில் டெபாசிட்  செய்த  பணம் எவ்வாறு  பெறப்பட்டது ?  எதற்காக  இவ்வளவு பணம்   கையில் வைத்திருந்தீர்கள்  என  பல   கேள்விகள்   கேட்கப்படும் .

முக்கிய  அம்சங்கள்:

“ஆபரேஷன் க்ளீன் மணி’யின் முதல்கட்ட நடவடிக்கை, நோட்டீஸ் அனுப்பப்பட்ட 18 லட்சம் பேரில் 9.5 லட்சம் பேர் மட்டுமே பதிலளித்துள்ளதால், தற்போது  ஆபரேஷன் க்ளீன் மணி 2.0-ஐ வருமான வரித்துறை முன்னெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ள  வங்கிக்கணக்கை அடையாளம் கண்டு நடவடிக்கை

1 கும்  மேற்பட்ட, பான் கார்டுகள் உள்ளவர்கள்  அடையாளம் காணப்படுவார்கள்

ரூபாய்   நோட்டு  செல்லாது என  அறிவித்த  பின்னர், அதிகளவில்  பண பரிவர்த்தனை  செய்தவர்கள்  அடையாளம்  காணப் பட்டு  விளக்கம்  கேட்பது  இதில் மேற்கொள்ளப்படும்   விசாரணைக்கு   பின்னர், வரி ஏய்ப்பு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படும்.

விவரம் :

ரூ.25 லட்சத்துக்குக் கீழ் உள்ள டெபாசிட் – அபராதம், 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை சிறைத்தண்டனை

25 லட்சத்துக்கு மேல் உள்ள டெபாசிட் -   அபராதம் , 6 மாதம் முதல் 7 வருடம் வரை சிறைத்தண்டனை

இதுவரை   செயல்படாமல்   இருந்த வங்கி கணக்கில் திடீரென  பணத்தை  டெபாசிட் செய்து, பரிவர்த்தனையில்  ஈடுபட்டிருப்பது.

இது போன்ற பல  முக்கிய  காரணங்களுக்காக தான்  தற்போது  வருமான வரித்துறையினர்  கிளீன்   மணி 2.௦.  என்ற  ஆபரேஷன் மூலம்   களத்தில்   இறங்க உள்ளனர் . எனவே  வங்கியில் அதிக  பணம்   டெபாசிட்  செய்தவர்கள்   அதற்குண்டான   சரியான  ஆவணங்களை வைத்திருப்பது   நல்லது  
.


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

UPI-யோடு கிரெடிட் கார்டா..! மெர்சல் காட்டிய கூகுள் பே..! இந்தியர்கள் செம குஷி!!
டிசம்பர் 31 கடைசி தேதி.. இந்த பணிகளை மறக்காதீங்க.. இல்லைனா அபராதம் விதிக்கப்படும்!