
PM Surya Ghar Yojana scheme: பிரதமரின் சூர்யா கர் யோஜனா திட்டத்தின் கீழ் 6.75 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.2 லட்சம் வரை பிணையமில்லாத கடன்கள் வழங்கப்படுகிறது. அதாவது பிரதமர் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா திட்டத்தின் கீழ், வீடுகளில் சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவுவதற்கு 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
சூரிய மின்சக்தி திட்டம் (Solar power project)
உலகின் மிகப்பெரிய உள்நாட்டு கூரை சூரிய மின்சக்தி முயற்சி திட்டமான பிரதமர் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா 10 லட்சம் வீடுகளுக்கு சூரிய மின்சக்தியை வழங்கியுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் 20 லட்சம் வீடுகளுக்கு சூரிய மின்சக்தியை வழங்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. மேலும் மார்ச் 2027க்குள் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய மின்சக்தியை வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
"பிரதமர் சூர்யா கர்: முஃப்த் பிஜ்லி யோஜனா ( PM Surya Ghar Yojana scheme) திட்டத்தின் கீழ் இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் சூரிய மின்சக்தியை வழங்கியுள்ளன" என்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
பிரதமர் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா திட்டம் என்றால் என்ன?
இந்தியாவில் மின்சார பயன்பாடுகளை குறைத்து சூரிய மின்சக்தி பயன்பாடுகளை அதிகரிப்பதற்காக பிரதமர் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி பேனல்களை மக்கள் தங்கள் வீடுகளில் நிறுவுவதற்கு மத்திய அரசு 40% வரை மானியம் வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 12 பொதுத்துறை வங்கிகள் எளிதான நிதியுதவி விருப்பங்களை வழங்குகின்றன. இதில் 6.75 சதவீத மானிய வட்டி விகிதத்தில் ரூ.2 லட்சம் வரை பிணையமில்லாத கடன்கள் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் என்னென்ன சலுகைகள்?
* இந்த திட்டத்தில் ரூ.78,000 வரை மானியம் கிடைக்கும்.
* ஆண்டுக்கு 6.75 சதவீத வட்டியுடன் தொடங்கும் ரூ.6 லட்சம் வரை கடன்கள கிடைக்கும். இதில் ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு வருமான ஆவணங்கள் தேவையில்லை.
7% DA உயர்வு! நிலுவைத் தொகையும் கிடைக்குமா? சூப்பர் அப்டேட்
பிரதமர் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் தகுதிகள்
* இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பாவர்கள் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
* சூரிய மின்கலங்களை நிறுவுவதற்கு ஏற்ற கூரையுடன் கூடிய வீட்டை சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.
* வீட்டிற்கு செல்லுபடியாகும் மின்சார இணைப்பு இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கு குடும்பம் சூரிய மின்கலங்களுக்கு வேறு எந்த மானியத்தையும் பெற்றிருக்கக்கூடாது
இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது?
1.முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmsuryaghar.gov.in/ ஐப் பார்வையிடவும்
2. அதில் நுகர்வோர் என்ற ஆப்ஷனுக்கு சென்று “இப்போது விண்ணப்பிக்கவும்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும் (அல்லது) உள்நுழைவு கீழ்தோன்றும் மெனுவைத் திறந்து “நுகர்வோர் உள்நுழைவு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. உங்கள் மொபைல் எண்ணுடன் உள்நுழைந்து அதைச் சரிபார்க்கவும். பெயர், மாநிலம் மற்றும் பிற விவரங்களை வழங்கவும். உங்கள் மின்னஞ்சல் ஐடியைச் சரிபார்த்து உங்கள் சுயவிவரத்தைச் சேமிக்கவும்.
4. விற்பனையாளருக்கு, உங்கள் தேவையைப் பொறுத்து ஆம் அல்லது இல்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
5.'சோலார் ரூஃப்டாப்பிற்கு விண்ணப்பிக்கவும்' என்பதைக் கிளிக் செய்து, மாநிலம், மாவட்ட டிஸ்காம் மற்றும் பிற போன்ற விவரங்களை வழங்கவும்.
6. சாத்தியக்கூறு ஒப்புதலைப் பெற்றதும், விற்பனையாளரைத் தேர்ந்தெடுத்து மானியத்திற்கான வங்கி விவரங்களை வழங்கவும்.
போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 3 மடங்காக மாறும்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.