
ஆன்ட்ராய்டு, ஐபோன் பயனாளர்கள் ஷாக்.. டிசம்பர் இறுதியோடு இந்த போன்களுக்கு வாட்ஸ்அப் சேவை இல்லையாம்
தொழில் நுட்ப வசதி இல்லாத காரணத்தால் டிசம்பர் 31ம் தேதிக்கு பின்னர் சில வகை செல்போன்களுக்கு வாட்ஸ் அப் வசதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சில வகை செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் அடுத்த மாதம் 31ம் தேதிக்கு பின்னர் வாட்ஸ் அப் சேவை கிடைக்காது என்று வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிம்பியான ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்கள், சில வகை ஸ்மார்ட் போன்கள் மற்றும் செல்போன்களுக்கு வாட்ஸ் அப் சேவை கிடைக்காது என்பதை வாட்ஸ் அப் நிறுவனம் அதிகார பூர்மாக அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப் சேவை நிறுத்தம் தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம், "இந்த வகை போன்களும் எங்களுக்கு முக்கியம் என்றாலும், எதிர்கால சேவைக்கு இந்த வகை போன்களில் தொழில் நுட்ப வசதி இல்லை. அதனால் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி உள்ளது. எனவே, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ள வேறு போனை மாற்றிவிடுங்கள். அப்போதுதான் இந்த சேவையை தொடர்ந்து பெற முடியும்" என்று தனது இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் சேவை 'கட்' ஆகப்போகும் செல்போன் மாடல்கள்:
*சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்கள்
*பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10
*நோக்கியா எஸ் 40
*நோக்கியா எஸ் 60
*ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2
*வின்டோஸ் போன் 7.1
*ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ஆகிய போன்களில் வாட்ஸ் சேவை டிசம்பர் 31க்கு பிறகு கிடைக்காது.
சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்களை உற்பத்தி செய்வதை நோக்கியா நிறுவனம் நிறுத்திவிட்ட போதிலும் நோக்கியா ஈ6, நோக்கியா 5233, நோக்கியா சி5.03 நோக்கியா ஈ52 உள்ளிட்ட ஒரு சில மொபைல் போன்கள் புழக்கத்தில் உள்ளன. அந்த போன்களுக்கு இனி வாட்ஸ் அப் வசதி கிடைக்காது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.