
ஐ போனை விற்று வீடு வாங்கிய வித்தியாசமான பெண் ...!!!
சீனாவைச் சார்ந்த சென்ஹேன் என்ற பெண்மணி விநோதமான முறையில்,தான் காதலிப்பதாக கூறி, தனது இருபது காதலன்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் மொத்தம் 20 ஐபோன்களை வாங்கி அதனை விற்று வீடு வாங்கியிருகிறார்.
சென்ஹேனுக்கு புதிதாக வீடு வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அவர் இந்த கனவை நிறைவேற்ற யாரும் நம்பமுடியாத ஒரு செயலை செய்து தனது கனவை நிறைவேற்றியுள்ளார் என்றால் பாருங்களேன் .
சீனாவின் பிரபல சமூகவலைதளமான வைபோ-வில் இருபது ஆண்களிடம் பழகிய இவர், அந்த நபர்களை காதலிப்பதாக கூறி அவர்கள் ஓவ்வொருவரிடமும் ஒரே சமயத்தில் ஐபோன் 7 வாங்கி இருக்கிறார்.
பின்னர், அவர்களிடமிருந்து பெற்ற, ஐ போனை இணைய வர்த்தக நிறுவனத்திடம் விற்று ரூ.14 லட்சத்தை திரட்டி, தன் கனவு இல்லத்தை வாங்கியுள்ளார்.
இதுவும் நல்லாத்தான் இருக்கு ........
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.