BMW Motorrad : விரைவில் டூரிங் மாடல்களை இந்தியா கொண்டு வரும் பி.எம்.டபிள்.யூ.

By Kevin KaarkiFirst Published Feb 7, 2022, 12:54 PM IST
Highlights

பி.எம்.டபிள்.யூ. மோட்டராட் நிறுவனம் விரைவில் இரண்டு டூரிங் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

பி.எம்.டபிள்.யூ. மோட்டராட் நிறுவனம் K 1600 மற்றும் R 1250 RT டூரிங் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் K 1600 சீரிசில்- பி.எம்.டபிள்.யூ. K 1600 GTL, K 1600 B மற்றும் K 1600 கிராண்ட் அமெரிக்கா போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

கடந்த ஆண்டு பி.எம்.டபிள்.யூ. K 1600 மாடல்கள் அப்டேட் செய்யப்பட்டு மேம்பட்ட என்ஜின், எலெக்டிரானிக்ஸ், அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. K 1600 GTL மாடலில் 160 ஹெச்.பி. வழங்கும் 1649சிசி, இன்லைன் 6 சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இ ந்த என்ஜின் 179 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

Latest Videos

இந்த மாடலில் 10.25 இன்ச் கலர் TFT டிஸ்ப்ளே, ஃபுல் எல்.இ.டி. ஹெட்லைட், அடாப்டிவ் கார்னெரிங் லைட், மூன்று ரைட் மோட்கள், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் பி.எம்.டபிள்.யூ. K 1600 சீரிஸ் விலை ரூ. 30 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

பி.எம்.டபிள்.யூ. R 1250 RT மாடலில் 1254சிசி, பாக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 134 ஹெச்.பி. திறன், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை ஆல்-எல்.இ.டி. லைட்டிங், 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், மூன்று ரைடு மோட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

click me!