Share Market Today: தலால் ஸ்ட்ரீட்டில் ரத்தக்களறி! சென்செக்ஸ், நிப்டி படுவீழ்ச்சி! அதானி பங்குகள் அம்போ!

By Pothy Raj  |  First Published Jan 25, 2023, 3:39 PM IST

Share Market Today: மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி மிகப்பெரிய வீழ்ச்சியில் வர்த்தகத்தை முடித்துள்ளன.


Share Market Today:மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி மிகப்பெரிய வீழ்ச்சியில் வர்த்தகத்தை முடித்துள்ளன.

பங்குச்சந்தை அமைந்திருக்கும் தலால்(Dhalal street) தெருவில் முதலீட்டாளர்கள் பதற்றத்துடன் இருந்தனர். சென்செக்ஸ் 60ஆயிரம் புள்ளிகளாகவும், நிப்டி 18ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தன.

Tap to resize

Latest Videos

மாதத்தின் கடைசி பகுதியில் எப்அன்ட்ஓ எனப்படும் ஒப்பந்தங்கள் நிறைவு மற்றும் புதுப்பிப்பு காலத்தில் சந்தையில் ஒருவிதமான ஊசலாட்டம் காணப்படும். அந்த வகையில் இன்று சந்தையில் காலை முதலே சரிவும் அவ்வப்போது ஊசலாட்டமும் இருந்தது.

'நோ சார்ஜ்', அலைச்சல் இல்லை!வீ்ட்டுக்கே வரும் பணம்!எஸ்பிஐ வங்கிச் சேவை பற்றி தெரியுமா?

இது தவிர பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது, அதுமட்டுமல்லாமல் அன்றைய தினம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டிவீதம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது.இந்த இரு அறிவிப்பை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் சந்தையில் முதலீடு செய்வதைக் குறைத்தனர்.

காலை முதலே லாபமீட்டும் நோக்கில் பங்குகளை விற்பனை செய்ததால், சந்தையில் சரிவு தொடர்ந்தது. அது மட்டுமல்லாமல் அமெரிக்காவில் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது, மந்தநிலையை நோக்கிச் செல்கிறது என்ற தகவல், பெருநிறுவனங்களின் 3ம்காலாண்டு நிலவரம் மோசமாக இருப்பது,லாபம் குறைந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சந்தையில் ஐடி துறைப்பங்குகளுக்கு ஆதரவில்லாத சூழல் இருந்தது

யாரும் தப்பிக்கமுடியாது! சலுகையும் உண்டு! பட்ஜெட்டில் முக்கியஅறிவிப்பு என்னவாக இருக்கும்?

இது தவிர அதானி குழுமம் குறித்து ஹிடன்பெர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை அந்தநிறுவனத்தின் பங்குகளை கடுமையாகச் சரிய வைத்தது. இன்று மட்டும் அதானி குழுமத்தின் பங்குகள் 7 சதவீதம் சரிந்தன. 

அடுத்தவாரம் மத்திய பட்ஜெட் அறிவிப்பில் எந்தவிதமான திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்துதான் பங்குச்சந்தையின் பாதை தீர்மானமாகும். 

இன்று மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 773 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 60,205 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 226 புள்ளிகள் குறைந்து, 17,891 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில், 22 நிறுவனப் பங்குகள் விலை சரிந்தன, 8 நிறுவனப் பங்குகள் மட்டும் லாபத்தில் முடிந்தன. எச்யுஎல், டாடாஸ்டீல், மாருதி, என்டிபிசி, சன்பார்மா, ஐடிசி, நெஸ்ட்லேஇந்தியா, பார்திஏர்டெல் பங்குகள் லாபத்தில் முடிந்தன.

நிப்டியில் அதானி போர்ட், எஸ்பிஐ, இன்டஸ்இன்ட்வங்கி, எச்டிஎப்சி வங்கி, சிப்லா நிறுவனப் பங்குகள் அதிகசரிவைச் சந்தித்தன. ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுஸூகி, பஜாஜ்ஆட்டோ, எச்யுஎல், டாடா ஸ்டீல் பங்குகள் லாபத்தில் முடிந்தன.

நிப்டியி்ல் வங்கி, எரிசக்தி, பொதுத்துறை வங்கி, ரியல்எஸ்ட்டே துறைப்பங்குகள் 2 முதல் 3 சதவீதம் வரை சரிந்தன

click me!