bitcoin: bitcoin price: மூழ்கும் பிட்காயின்! 18 மாதங்களில் இல்லாத சரிவு: முதலீட்டாளர்களுக்கு பேரிழப்பு

Published : Jun 16, 2022, 09:28 AM IST
bitcoin: bitcoin price:  மூழ்கும் பிட்காயின்! 18 மாதங்களில் இல்லாத சரிவு: முதலீட்டாளர்களுக்கு பேரிழப்பு

சுருக்கம்

bitcoin : bitcoin price bitcoin slumped on Wednesday to a new 18-month low:கிரிப்டோகரன்ஸியில் ராஜா என்றழைக்கப்படும் பிட்காயின் மிகவும் ஆழ்ந்த, கறுப்புப் பக்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சிறிது சிறிதாக மதிப்பை இழந்து பிட்காயின் மூழ்கி வருகிறது.

bitcoin : bitcoin price :கிரிப்டோகரன்ஸியில் ராஜா என்றழைக்கப்படும் பிட்காயின் மிகவும் ஆழ்ந்த, கறுப்புப் பக்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சிறிது சிறிதாக மதிப்பை இழந்து பிட்காயின் மூழ்கி வருகிறது.

முதலீ்ட்டாளர்கள் கண்ணீர்

நல்ல லாபம், குறுகிய காலத்தில் அதிகலாபம் எனக் கருதி முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அனைவரும் தலையைில் கைவைத்துள்ளனர். பிட்காயின் மதிப்பு கடந்த 18 மாதங்களில் இல்லாத வகையில் நேற்று சரிந்தது. 

கிரிப்டோகரன்ஸி சந்தையில் நேற்று மட்டும் பிட்காயின் மதிப்பு 7.8 சதவீதம் சரிந்து 20,079 டாலராகக் குறைந்தது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப்பின் ஏற்பட்ட மோசமான வீழ்ச்சியாகும். அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து பிட்காயின் தனது மதிப்பில் 33 சதவீதத்தை இழந்துவிட்டது. இந்த ஆண்டிலிருந்து 50 சதவீதத்தை இழந்துள்ளது.

70% சரிவு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு பிட்காயின் 69ஆயிரம் டாலராக இருந்தநிலையில் அதிலிருந்து தற்போது 70 சதவீதம் மதிப்பை பிட்காயின் இழந்துள்ளது. 

அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை 75  புள்ளிகள் உயர்த்தியது. இதனால் பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் இனிமே அதிலிருந்து முதலீட்டை எடுத்து அமெரிக்க வங்கிகளிலும், பங்கு பத்திரங்கள், கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்வார்கள். 

90ஆயிரம் கோடி

இதனால் பிட்காயின் மதிப்பு மேலும் சரியும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகளவில் கிரிப்டோ சந்தையின் மதிப்பு 2.70 லட்சம் கோடி டாலராக இருந்தது. ஆனால், தற்போது 70 சதவீதம் சரி்ந்து 90,000 கோடி டாலராகக் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் கிரிப்டோ 10.20 கோடி டாலர் வெளியேறியுள்ளது.

இருண்ட பாதை

கிரிப்டோகரன்ஸி் சந்தை வல்லுநர்கள் கூறுகையில் “ கிரிப்டோகரன்ஸி தற்போது பிட்காயின் உண்மையான மதிப்பான 22ஆயிரம் டாலருக்கும் கீழ், ஆயிரம் டாலர் குறைவாகவே வர்த்தகத்தை நடத்தி வருகிறது. பிட்காயின் சந்தை தற்போது ஆழ்ந்த மற்றும் இருண்ட கட்டத்துக்கு செல்கிறது. இந்த மாதத்தில் மட்டம் பிட்காயின் மதிப்பு 30% சதரிந்துள்ளது, செவ்வாய்கிழமை 3 சதவீதம், புதன்கிழமை 7 சதவீதம் மதிப்பு சரிந்துள்ளது. தொடர்ந்து 8-வது நாளாக பிட்காயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் கிரிப்டோகரன்ஸி சந்தை மதிப்பு கடந்த 2 நாட்களில் 8 சதவீதம் சரிந்து 90 ஆயிரம் கோடி டாலராகக் குறைந்தது. அதிலும்  பிட்காயின் மதிப்பு கடந்த 48 மணிநேரத்தில் 14 சதவீதம் சரிந்துள்ளது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிரிப்டோகரன்ஸி மதிப்பு 26 சதவீதம் குறைந்துள்ளது.

ஒரு லட்சம்  கோடி டாலர்

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் கிரிப்டோசந்தையின் மதிப்பு ஒருலட்சம் கோடி டாலர் குறைந்துள்ளதுபணவீக்கம், குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ள பணவீக்கம் காரணமாக முதலீட்டாளர்கள் மனதில் ஏற்பட்ட அச்சம் காரணமாக பிட்காயின் மதிப்பு சரிந்துள்ளது.

பிட்கியான் மதிப்பு தொடர்ந்து 12வது வாரமாகச் சரிந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஒருபிட் காயின் மதிப்பு 49ஆயிரம் டாலராக இருந்த நிலையில் தற்போது 21 ஆயிரம் டாலராகச் சரிந்துள்ளது.கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் பிட்காயின் மதிப்பு 68ஆயிரம் டாலராக உயர்ந்ததுதான் உச்சபட்சமாகும். அதன்பின் இப்போதுவரை பிட்காயின் மதிப்பு 60 சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பிட்காயின் மதிப்பு 14 ஆயிரம் டாலராகக் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு