ஊதிய உயர்வு அறிவிப்பால் நாடு முழுவதும் 110,000 க்கும் மேற்பட்ட எல்.ஐ.சி. ஊழியர்கள் பயனடைய உள்ளனர். மத்திய மற்றும் பல மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் மற்றும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, எல்ஐசி ஊழியர்களுக்கு மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 2022 முதல் முன்தேதியிட்டு எல்.ஐ.சி. பணியாளர்கள் 17 சதவீத ஊதிய உயர்வைப் பெற உள்ளனர்.
ஊதிய உயர்வு அறிவிப்பால் நாடு முழுவதும் 110,000 க்கும் மேற்பட்ட எல்.ஐ.சி. ஊழியர்கள் பயனடைய உள்ளனர். மத்திய மற்றும் பல மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எல்ஐசியின் அறிவிப்பின்படி, ஏப்ரல் 1, 2010க்குப் பிறகு பணியில் சேர்ந்த 24,000 ஊழியர்களின் NPS பங்களிப்புகள் 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயரும். மேலும், ஓய்வூதியம் பெறுவோர் ஒரு முறை கூடுதல் தொகையைப் பெறுவார்கள். 30,000 க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் இதன் மூலம் பலனடைவார்கள். அரசு ஏற்கெனவே குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளது. அதன் மூலம் 21,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் குடும்பங்கள் பயன் பெற்றனர்.
ஊழல் பேர்வழிகளை புறம் தள்ளி நம்பிக்கையுடன் மக்களைச் சந்திக்கிறோம்: அண்ணாமலை
"இந்த ஊதிய உயர்வு தற்போதைய மற்றும் முன்னாள் எல்ஐசி ஊழியர்களுக்கு பயனளிக்கும். இது எல்ஐசியை எதிர்கால சந்ததியினருக்கு பணிபுரிய ஏற்ற கவர்ச்சிகரமான இடமாக மாற்றும்" என்றும் எல்ஐசி தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி. வழக்கமாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, அதன் ஊழியர்களுக்கான ஊதியங்களைத் திருத்தி அமைக்கிறது. ஊதிய உயர்வு தவிர, இந்த அறிவிப்பில் பல திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய ஓய்வூதிய முறையின் பங்களிப்பை 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிப்பது மற்றொரு முக்கியமான அம்சம் ஆகும்.
NPS பங்களிப்பில் செய்துள்ள முக்கியமான மாற்றங்கள் ஏப்ரல் 1, 2010க்குப் பிறகு நிறுவனத்தில் சேர்ந்த சுமார் 24,000 ஊழியர்களுக்கானது எனவும் கூறப்பட்டுள்ளது. ஊதியத் திருத்தம் எல்ஐசி ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முறை கருணைத் தொகையை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் வங்கிகளுக்கு முக்கியமான ரோல்! தினமும் தேர்தல் ஆணையத்துக்கு ரிப்போர்ட்!