ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதம் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும்
ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதம் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். பொதுவாக, வங்கிக் கிளைகள் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மூடப்படும். இவை தவிர பொது விடுமுறை தினங்கள், அரசு சார்ந்த பண்டிகைகளுக்கு, குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
இருப்பினும், சுதந்திர தினம் போன்ற தேசிய விடுமுறை நாட்களில், நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். இந்த மாதம் விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, உங்கள் வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது முக்கியம். ஆகஸ்ட் மாதத்தில் வரும் வங்கி விடுமுறைகள் எப்போது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
undefined
தங்கத்துக்கு அடுத்து வெள்ளியில் முதலீடு செய்யலாமா? கைகொடுக்குமா? ஆனந்த் சீனிவாசன் கொடுத்த அட்வைஸ்!
ஆகஸ்ட் 2024 : வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல்
ஆகஸ்ட் 3 (சனிக்கிழமை): கேர் பூஜை (அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 4 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 8 (திங்கட்கிழமை): டெண்டோங் லோ ரம் ஃபாட் (காங்டாக்)
ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை): 2-வது சனிக்கிழமை நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 11 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 13 (செவ்வாய்): தேசபக்தர் தினம் (இம்பால்)
ஆகஸ்ட் 15 (வியாழன்): சுதந்திர தினம் (நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 18 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 19 (திங்கட்கிழமை): ரக்ஷ பந்தன் ( திரிபுரா, குஜராத், ஒடிசா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் விடுமுறை)
ஆகஸ்ட் 20 (செவ்வாய்கிழமை): ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி (கொச்சியில் விடுமுறை)
ஆகஸ்ட் 24 (சனிக்கிழமை): 4-வது சனிக்கிழமை (நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை)
ஆகஸ்ட் 25 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 26 (திங்கட்கிழமை): கிருஷ்ண ஜெயந்தி (குஜராத், ஒடிசா, சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகண்ட், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் விடுமுறை)
உங்கள் சம்பளம் குறைவாக இருந்தாலும் அதிகம் சம்பாதிக்கலாம்.. இந்த 6 டிப்சுகளை பாலோ பண்ணுங்க..
வங்கிகளின் கணக்கு முடிப்பு விடுமுறை: விதிமுறைகளின்படி, அனைத்து வங்கிகளும் ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் தேசிய மற்றும் பிராந்திய விடுமுறை நாட்களில் மூடப்படும். எனவே சிரமத்தைத் தவிர்க்க இந்தத் தேதிகளில் தேவையான வங்கிச் செயல்பாடுகளைத் திட்டமிடுவதை உறுதிசெய்யவும். எனினும் இண்ட்ர்நெட் பேங்கிங், எஸ்.எம்.எஸ் பேங்கிங், இணைய வழி பரிவர்த்தனைகள், ஏடிஎம்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும்.