பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் உயிரிழந்தார்

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 12, 2022, 04:31 PM ISTUpdated : Feb 12, 2022, 04:41 PM IST
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் உயிரிழந்தார்

சுருக்கம்

பஜாஜ் குழும நிறுவனங்களின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் பூனேவில் உயிரிழந்தார் என அந்நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

பஜாஜ் குழுமங்களின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் உயிரிழந்தார். அவருக்கு வயது 83. இந்தியாவின் முன்னணி வியாபார தலைவர்களில் ராகுல் பஜாஜ் முக்கியத்துவம் வாயந்தவராக திகழ்ந்தார். 

ஜூன் 10, 1938 ஆண்டு பிறந்த ராகுல் பஜாஜ் பொருளாதாரம் மற்றும் சட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இத்துடன் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்று இருக்கிறார். இவர் 1968 ஆம் ஆண்டு நிர்வாக அலுவலராக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் ஆட்டோ வளர்ச்சிக்கு ராகுல் பஜாஜ் முக்கிய பங்காற்றினார். ராகுல் பஜாஜ் 2001 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது பெற்றார். கடந்த ஆண்டு இவர் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். ஐந்து தலைமுறைகளுக்கும் மேல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவராக ராகுல் பஜாஜ் பதவி வகித்து வந்தார். ராகுல் பஜாஜை தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ தலைவராக 67 வயதான நீரஜ் பஜாஜ் பதவியேற்றார்.

1968 ஆண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார். இவர் இந்த பதவியேற்கும் போது இத்தகைய பதவியை ஏற்ற இளம் இந்தியர் என்ற பெருமையை ராகுல் பஜாஜ் பெற்றார். அதன்பின் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அசுர வளர்ச்சியை பெற்றதோடு தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்டது. 1965 ஆண்டில் பஜாஜ் ஆட்டோ மொத்த வருவாய் ரூ. 3 கோடியாக இருந்தது. 2008 இல் மொத்த வருவாய் ரூ. 10 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!