Aston Martin DBX 707 : 697 ஹெச்.பி. திறனுடன் அறிமுகமான ஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி.

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 02, 2022, 10:19 AM IST
Aston Martin DBX 707 : 697 ஹெச்.பி. திறனுடன் அறிமுகமான ஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி.

சுருக்கம்

ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் DBX707 உலகின் சக்திவாய்ந்த ஆடம்பர எஸ்.யு.வி. என்ற பெருமையுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் DBX707 சர்வதேச  சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆடம்பர எஸ்.யு.வி. மாடல் ஆகும். புதிய ஆஸ்டன் மார்டின் DBX707 மாடலில் 697 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டப் வேகத்தை 3.1 நொடிகளில் எட்டிவிடும்.

புதிய ஆஸ்டன் மார்டின் DBX707 விலை 2,32,000 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,73,35,156 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் உற்பத்தி இந்த ஆண்டின் முதல் காலாண்டில் துவங்குகிறது. வினியோகம் இரண்டாவது காலாண்டில் துவங்குகிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் போர்ஷ் கேயென் டர்போ ஜி.டி. மற்றும் லம்போர்கினி உருஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

இந்த மாடல் ஆஸ்டன் மார்டின் DBX மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் செயல்திறன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஆடம்பர எஸ்.யு.வி. மாடலில் 4 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 697 பி.ஹெச்.பி. திறன், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் புதிய டர்போசார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை காருக்கு தேவையான கூடுதல் திறனை வழங்குகிறது.

ஆஸ்டன் மார்டின் DBX707 மாடலில் முற்றுலும் புதிய குவாட் எக்சிட் ஆக்டிவ் எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அசாத்திய சவுண்ட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள என்ஜினுடன் 9 ஸ்பீடு வெட்-கிளட்ச் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் மோட்களில் கிடைக்கிறது. மேலும் இந்த மாடலில் ஸ்மார்ட் ஆட்டோமேடிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மவழங்கப்பட்டு இருக்கிறது. 

சவுகரியமான ரைடு அனுபவத்தை வழங்க இந்த மாடலில் மேம்பட்ட ஏர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆக்டிவ் ரோல் கண்ட்ரோல் சிஸ்டம், மேம்பட்ட எலலெக்டிரானிக் ஸ்டீரிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு ஆறு பிஸ்டன்கள் ககொண்ட டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்