apple india:சென்னையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்-13 தயாரிப்பு தொடங்கியது: விலை குறையுமா? முக்கிய 5 கேள்விகள்

By Pothy Raj  |  First Published Apr 12, 2022, 11:08 AM IST

apple india : ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் 13 ரக ஸ்மார்ட்போன் தயாரிப்பை சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது.


ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் 13 ரக ஸ்மார்ட்போன் தயாரிப்பை சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது.
சீனாவை நம்பியிருக்கும் சூழலை படிப்படியாகக் குறைக்கும் நோக்கில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் தயாரிப்பு ஆலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் தயாரிப்பை நேற்று முதல் தொடங்கியுள்ளது.

சீனாவிலிருந்து ஐ-போன் தயாரிப்பை படிப்படியாக ஸ்ரீபெரும்புதூருக்கு மாற்றியும், பல்வேறு நகரங்களுக்கு மாற்றியும், இந்தியாவிலேயே ஐபேட்டையும் அசெம்பிள் செய்யவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் தயாரிப்பைத் தொடங்கிய நிலையில் இதுவரை 3 மாடல்களை இந்தியாவில் தயாரித்த நிலையில் 4-வதாக ஐபோன்-13 ரகசீரிஸ் மாடலும் தயாரிக்கப்பட உள்ளதுஐ-போன் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கும் முக்கியக் கேள்வி என்பது, சென்னையிலேயே ஐ-போன் தயாரிக்கப்பட்டுவிட்டதே, அப்படியென்றால் இனிமேல் ஐபோன் விலை குறையுமே என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற 5 கேள்விகள் ஐபோன் ரசிகர்கள் மனதில் ஓடுகின்றன.

சென்னையில் ஐபோன்-13 தயாரிப்பு தொடங்கியநிலையில் இந்தியாவில் விலை குறையுமா?

இப்போதுள்ள சூழலில் ஐ-போன் விலை குறையவாய்ப்பில்லை. ஐபோன்-13 இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும், அல்லது வெளிநாடுகளில் தயாரானாலும் விலை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தயாரிப்பைத் தொடங்கினாலும் ஐ-போன்11, ஐ-போன்-12 ஆகியவற்றின் விலையைக் குறைக்கவில்லையே. ஆனால், ஆன்-லைன் விற்பனைத் தளங்களான பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்டவைகளில் தள்ளுபடி கிடைக்கலாம்

இந்தியாவில் ஐபோன்-13 விலை எப்போது குறையும் என எதிர்பார்க்கலாம்?

வரும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் 14 சீரிஸை அறிமுகம் செய்ய இருக்கிறது.அப்போது வேண்டுமானால் ஐபோன்13 ரகத்தின் விலை குறைந்து ரூ.50ஆயிரத்துக்கு வரக்கூடும். குறிப்பாக தீபாவளி பண்டிகை நேரத்தில் ஆப்பிள் விலை குறையக்கூடும்.  அதுமட்டுமல்லாமல் பண்டிகை நேரத்தில் ஆப்பிள் ஏர்பாட்களையும் இலவசமாக தரும் சலுகையும் கிடைக்கலாம். 

ஐ-போன்-13 ப்ரோ சீரிஸ் போன்களை இந்தியாவில் ஏன் தயாரிக்கவில்லை?

ஆப்பிள் நிறுவனம் இதுவரை ப்ரோ ரக ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தயாரிக்கவில்லை. ஐபோன் 11ப்ரோ, 12 ப்ரோ ஆகியவையும் உள்நாட்டில் தயாரிக்கப்படவில்லை. வழக்கமான மாடல்களைவிட ப்ரோ மாடல்களுக்கு தேவை குறைவு, குறிப்பாக இதன் விலை அதிகம் என்பதாலும் விற்பனையும் குறைவு. இந்த ப்ரோ-மாடல் செல்போனை உருவாக்கப் பயன்படும் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்தவை, உதிரிபாகங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை என்பதால் விலை அதிகம்.

இந்தியாவில் தயாரிக்கபப்டும் ஐபோன்-12 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகுமா?

இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன்-13 இந்தியாவில் உள்ள தேவையைத் தீர்க்கவே விற்கப்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்-13 ரக போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகாது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐ-போன்கள் மாடல்கள் என்னென்ன ?
இந்தியாவில் ஆப்பிள் நிறுனம் ஐபோன்-7, ஐபோன்எஸ்இ, ஐபோன்எக்ஸ்ஆர், ஐபோன்-11 மற்றும் 12 ரக மாடல்கள் தயாரிக்கப்படுகின்றன. 


 

click me!