லண்டனில் இந்திய 100 ரூபாய் நோட்டு ரூ.76 லட்சத்துக்கு ஏலம் போனது. அப்படி என்ன இந்த ரூபாய் நோட்டில் ஸ்பெஷல்? என்பது குறித்து பார்ப்போம்.
இந்திய 100 ரூபாய் நோட்டு
இந்தியாவில் 100 ரூபாய் நோட்டுகள், 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி இந்த நோட்டுகளை அதிக அளவில் அச்சடிக்கிறது. இந்நிலையில், இந்திய ரூபாய் ஒன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த ஏலத்தில் ரூ.56 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. அப்படி என்ன இந்த நோட்டில் உள்ளது? என்பதை பார்ப்போம்.
அதாவது லண்டனில் நடைபெற்ற ஒரு ஏலத்தில் இந்திய 100 ரூபாய் நோட்டு ரூ.56,49,650க்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒரு சாதாரண நோட்டு ரூ.56 லட்சத்துக்கு விலை போனது எப்படி? என நீங்கள் கேட்கலாம். அதிக விலைக்கு ஏலம் போன இந்த 100 ரூபாய் நோட்டு 1950ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டதாகும். இந்த நோட்டில் அமைந்துள்ள HA 078400 என்ற வரிசை எண் தான் இது அதிக விலைக்கு ஏலம் போக காரணமாகும்.
அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த நோட்டில் குறிப்பிடப்பட்டுள்ள HA என்பது ஹஜ் ஆகும். அதாவது 1950ம் ஆண்டு வளைகுடா நாடுகளுக்குச் ஹச் யாத்திரை செல்லும் இந்தியர்களுக்காக ரிசர்வ் வங்கி HA 078400 என்ற வரிசை எண்ணுடன் 100 ரூபாய் நோட்டை வெளியிட்டது. இந்திய நாணயத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கம் வாங்குவதைத் தடுப்பதற்காக இந்த சிறப்பு குறியீட்டுடன் 100 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது.
இந்த நோட்டுகளில் HA என்ற குறியீடு உள்ளதால் அவற்றை எளிதாக அடையாளம் காண முடியும். வளைநாடுகளில் போலி இந்திய ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண இது வசதியாக இருந்தது. மேலும் இந்த 100 ரூபாய் நோட்டுகளின் நிறமும் வழக்கமான இந்திய ரூபாயிலிருந்து வேறுபட்டு காணப்பட்டது. 1961ம் ஆண்டு குவைத் அதன் சொந்த நாணயத்தை அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மற்ற வளைகுடா நாடுகளும் சொந்த நோட்டுகளை கொண்டு வந்தன. இதன் காரணமாக 1970ம் ஆண்டு ஹஜ் நோட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இப்போது இந்த ரூபாய் நோட்டு அரிதாக இருப்பதால் ரூ.76 லட்சத்துக்கு ஏலம் போகியுள்ளது.
இரண்டு 10 ரூபாய் நோட்டு
இதேபோல் லண்டனில் நடந்த மற்றொரு ஏலத்தில் இரண்டு பழைய 10 ரூபாய் நோட்டுகள் ஒன்று ரூ.6.90 லட்சத்துக்கும், மற்றொன்று ரூ.5.80 லட்சத்துகும் ஏலம்போயின. 1918ம் ஆண்டு உலகப் போரின் இறுதி ஆண்டுகளில் இந்த ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த 10 ரூபாய் நோட்டுகள் மிகப் பெரிய வரலாற்று மதிப்பைக் கொண்டுள்ளன.
உலகப்போரின்போது கடலில் மூழ்கடிப்பட்ட பிரிட்டிஷ் கப்பலான எஸ்எஸ் ஷிராலாவில் இருந்து இந்த ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. பல காலம் தண்ணீரில் மூழ்கி இருந்தாலும் ஒரு மூட்டைக்குள் இந்த ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பாக நல்ல நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்புகளை பெற்றதால் இந்த 10 ரூபாய் நோட்டுகள் அதிக விலைக்கு ஏலம் போகியுள்ளன.