
AMO எலெக்ட்ரிக் பைக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாண்டி பிளஸ் பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை ரூ. 1,10,460 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
புதிய ஜாண்டி பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 60V/40 Ah மேம்பட்ட லித்தியம் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல் ஸ்விட்ச், எலெக்டிரானிக் அசிஸ்ட் பிரேக்கிங் சிஸ்டம், ஆண்டி-தெஃப்ட் அலாரம், உறுதியான சேசிஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், சைடு ஸ்டாண்டு சென்சார், முன்புறம் டிஸ்க் பிரேக், டி.ஆர்.எல். லைட்கள், என்ஜின் கில் ஸ்விட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனுடன் டி.சி. மோட்டார் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் ஆகும். இத்துடன் ஃபிக்சட் மற்றும் போர்டபில் பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஜாண்டி பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மொபைல் யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு AMO எலெக்ட்ரிக் பைக்ஸ் நிறுவனம் மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர், ரெட்-பிளாக், கிரே பிளாக், புளூ பிளாக், வைட் பிளாக் மற்றும் எல்லோ பிளாக் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் இந்த ஸ்கூட்டர் நாடு முழுக்க சுமார் 140 விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.