மொபைல் நெட்வொர்க் அனுபவ ரிப்போர்ட் ஏப்ரல் 2020: ஏர்டெல் தான் தலைசிறந்த நெட்வொர்க்

By karthikeyan VFirst Published Apr 29, 2020, 8:31 PM IST
Highlights

மொபைல் நெட்வொர்க் அனுபவ ஆய்வின் 2020 ஏப்ரல் மாத ரிப்போர்ட்டின் படி, இந்தியாவில் சிறந்த மொபைல் நெட்வொர்க் சேவையை வழங்கிவருவது ஏர்டெல் தான் என்பது உறுதியாகியுள்ளது. அனைத்து நெட்வொர்க்குகளையும் உள்ளடக்கி நடத்தப்பட்ட ஆய்வின் ரிப்போர்ட்டின்படி ஏர்டெல் தான் வெற்றியாளர்.

இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் மொபைல் மூலமாக இண்டர்நெட் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களாக உள்ளனர் என்பது உங்களுக்கு தெரியுமா? மிகப்பெரிய நாடான இந்தியாவில் நிறைய நெட்வொர்க்குகள் உள்ளன. அதில் எந்த நெட்வொர்க் சிறப்பாக செயல்படுகிறது, எதன் சிக்னல் நன்றாக கிடைக்கிறது என்பதை, பயன்பாட்டாளர்கள் மொபைல் அனுபவங்களை பகுப்பாய்வு செய்யும் ”Independent Global Standard" என்ற நிறுவனம் கடந்த சில மாதங்களாக கேட்டறிந்தது. துல்லியமான முடிவுகளை பெறுவதற்காக 8 மில்லியன் சாதனங்களில் 21 பில்லியனுக்கும் அதிகமான அளவீடுகளில் செய்த ஆய்வின், ஏப்ரல்(2020) மாதத்துக்கான முடிவு வெளிவந்துள்ளது.

வீடியோ ஸ்ட்ரீமிங், நெட்வொர்க் கவரேஜ், பதிவிறக்க வேகம் உட்பட பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் அனைத்து நெட்வொர்க்குகளின் தரத்தையும் ஓபன் சிக்னல் ஆய்வு செய்தது. அதில் பயனாட்டாளர்களின் வீடியோ அனுபவம், வாய்ஸ் ஆப் அனுபவம், பதிவிறக்க வேகம் மற்றும் தாமதமின்மை என 7ல் 4 விஷயங்களில் ஏர்டெல் தான் சிறந்த நெட்வொர்க் என முடிவு வந்துள்ளது. இந்த ஆய்வில் ஏர்டெல் தான் வெற்றியாளர். எனவே உங்கள் நெட்வொர்க் எது என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

வீடியோ அனுபவம்:

நீங்களும் பெரும்பாலானோரில் ஒருவராக இருந்தால், அதாவது, அதிகமான நேரத்தை நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் செலவிடுபவராக இருந்தால், கடந்த மாதத்தில் நீங்கள் அதில் செலவிட்ட நேரம் கணிசமாக அதிகரித்திருக்கும். ஸ்மார்ட்போன்கள் தான் பெரும்பாலானோரின் பொழுதுபோக்கும் அல்லது படங்களை பார்க்கும் முதன்மை தேர்வாக இருப்பதால், பயன்பாட்டாளர்களின் அனுபவத்தை தீர்மானிப்பதில் மொபைல் நெட்வொர்க்கின் பங்கு மிக முக்கியமானதாகிறது.



மொபைல் நெட்வொர்க் சிறப்பாகவோ அல்லது மோசமாகவோ இருக்கலாம். ஆனால் அது ஏன் அப்படி இருக்கிறது என்ற புரிதலை ஏற்படுத்த ஓபன் சிக்னல் உதவுகிறது. 100 புள்ளி அளவில் வீடியோவின் லோடிங் நேரம், படத்தின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில், வீடியோ அனுபவம் மதிப்பிடப்பட்டது. அந்த மதிப்பீட்டில் ஏர்டெல் தான் வெற்றியாளர். வீடியோ அனுபவத்தை பொறுத்தமட்டில் ஏர்டெல் தான் சிறந்த நெட்வொர்க் என்ற பெருமையை பெற்றது. மற்ற நெட்வொர்க் நிறுவனங்களில் சில நியாயமாக உள்ளது அல்லது மோசம் என்ற அளவிலேயே முடிவுகளை பெற்றுள்ளன. எனவே வீடியோ அனுபவத்தில் ஏர்டெல் தான் வெற்றியாளர்.

வாய்ஸ் ஆப் அனுபவம்:

ஃபேஸ்புக், மெசெஞ்சர், வாட்ஸ் அப், ஸ்கைப் ஆகிய ஆப்-களில்(அப்ளிகேஷன்களில்) கால் செய்பவரா நீங்கள்? நீங்கள் ஏர்டெல் பயன்பாட்டாளராக இருந்தால், இதுபோன்ற கால்கள் செய்யும்போது எந்தவித பிரச்னையையும் எதிர்கொள்ளாமல் சிறந்த அனுபவத்தையே பெற்றிருப்பீர்கள். ஓபன் சிக்னல் ஆய்வு முடிவே அதற்கு சாட்சி. ஊரடங்கு காலத்தில், பயன்பாட்டாளர்களின் தொடர்புகளை உறுதி செய்யும் வகையில், ஏர்டெல் அதன் சேவையை மேம்படுத்தியதன் விளைவாக, ஏர்டெல் பயன்பாட்டாளர்கள், இக்கட்டான இந்த நேரத்திலும் கூட தரமான சேவையை பெற்றுவருகின்றனர். அதனால்தான் இந்த ஆய்வு முடிவில் கூடுதலாக 3.4 புள்ளிகளை பெற்று 100க்கு 75.5 புள்ளிகளுடன் ஏர்டெல் டாப்பில் உள்ளது.



மற்ற நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களது பயன்பாட்டாளர்களுக்கு தரமான சேவையை கொடுக்க முயற்சி செய்தாலும், தங்களது போட்டியாளர்களை பின்னுக்குத்தள்ளி ஏர்டெல் தான் முன்னிலையில் உள்ளது. பயனாளிகள் வாய்ஸ் கால்கள் செய்யும்போது அடைந்த திருப்தியின் அடிப்படையில், வாய்ஸ் கால்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. அதிலும் ஏர்டெல்லே சிறந்து விளங்குவது உறுதியாகியுள்ளது.

பதிவிறக்க வேகம்:

மொபைல் பயன்படுத்துபவர்கள், தங்களது நெட்வொர்க்கை தேர்வு செய்யும்போது, முக்கியமாக கருத்தில் கொள்ளும் ஒரு விஷயம் பதிவிறக்க வேகம் தான். பதிவிறக்கம் வேகமாக இருக்க வேண்டும் என்றுதான் பயனாளிகள் விரும்புவார்கள். நீங்கள் ஏர்டெல் பயன்பாட்டாளராக இருந்தால், உங்கள் தேர்வு மிக மிகச்சரியானது. 3G மற்றும் 4G என இரண்டிலுமே, அதிவேக பதிவிறக்கத்தில் மற்ற நெட்வொர்க்குகளுக்கு தலைவனே ஏர்டெல் தான். ஓபன் சிக்னலின் கடந்த ரிப்போர்ட்டுக்கு பின்னர், ஏர்டெல் தொடர்ந்து அதிகவேக பதிவிறக்கத்தை உறுதி செய்ததுடன், சராசரி பதிவிறக்க வேகம் 10.1 Mbps என்ற அளவில் உள்ளது. 4 முழுமையான ”HD 1080p” வீடியோக்களை ஒரே நேரத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஏர்டெல் நெட்வொர்க்கில் காணமுடியும். எனவே பதிவிறக்க வேகத்திலும் ஏர்டெல் தான் டாப்.
 

தாமதமின்மை (Latency Experience):

கடைசியாக ஆன்லைனில் கேம் ஆடுபவர்களுக்கான குட் நியூஸ். நீங்கள் பப்ஜி போன்ற கேம் ஆடும்போதோ அல்லது ஆன்லைனில் ஒரு விஷயத்திற்கு நீங்கள் பதிலளிக்க நீண்ட நேரம் ஆனாலோ உங்கள் நெட்வொர்க்கின் "Latency" அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். ஏர்டெல் பயன்பாட்டாளர்களுக்கு அந்த பிரச்னை இருக்காது. மொபைல் நெட்வொர்க்கின் "Latency" குறைவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உங்களால் ஆன்லைனில் விரைந்து செயல்பட முடியும். "Latency" குறைவாக இருந்தால் தான் ஆன்லைனில் நீங்கள் கேம் ஆடும்போது விரைந்து செயல்பட முடியும். ஏர்டெல்லின் "Latency" தான் மற்ற நெட்வொர்க்குகளை விட மிக மிக குறைவு; வெறும் 54.1 மில்லிசெகண்ட் தான். "Latency" குறைவாக இருந்தால் தான் ஆன்லைனில் உங்களால் விரைந்து பதிலளிக்கவோ அல்லது எதிர்வினையாற்றவோ முடியும். எனவே ஆன்லைனில் கேம் ஆடுவதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், உங்களுக்கான தீர்வு ஏர்டெல் தான்.  

மண்டல வாரியான பகுப்பாய்விலும், பயன்பாட்டாளர்களுக்கு தரமான நெட்வொர்க் சேவையை வழங்குவதில், தங்களது போட்டியாளர்களை பின்னுக்குத்தள்ளி ஏர்டெல் தான் முன்னிலையில் உள்ளது. பயனாளிகளின் தேவைக்கு முன்னுரிமை கொடுக்கும் நிறுவனம் ஏர்டெல். எனவே உங்களது நெட்வொர்க்கை மாற்றும் மனநிலையில் இருந்தால், உங்களுக்கு ஓபன் சிக்னலின் மொபைல் நெட்வொர்க் அனுபவ ஆய்வின் ரிப்போர்ட், சரியான நெட்வொர்க்கை கண்டறிந்து தேர்வு செய்ய உதவியாக இருக்கும். 

 

click me!