
பங்குச்சந்தையில் மதிப்பு மிக்க 50 நிறுவனங்கள் பட்டியலில் தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி பவர் நிறுவனம் இடம் பெற்றுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அதானி பவரின் பங்கு மதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது.
ரூ.ஒரு லட்சம் கோடி
அதானி பவரின் பங்கு மதிப்பு நேற்று ஒருநாள் வர்த்தகத்தில் மட்டும் 5 சதவீதம் அதிகரித்து ரூ.259.20 ஆக உயர்ந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதானி பவரின் பங்கு மதிப்பு 109சதவீதம் அதிகரி்த்து, ரூ.123.75 ஆக அதிகரித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் அதானிபவரின் சந்தை மதிப்பு ரூ. ஒருலட்சம் கோடியை எட்ட உள்ளது. வர்த்தகத்தின் இடையே ரூ.99,972 கோடிவரை அதானி பவரின் பங்கு மதிப்பு உயர்ந்தது.
ஒட்டுமொத்த சந்தை மதிப்பு பட்டியலில் அதானி பவர் 49-வது இடத்தில் இருக்கிறது. டாபர் இந்தியா நிறுவனம்(ரூ.98,470கோடி), ரியல் எஸ்டேட் நிறுவனம் டிஎல்எப்(ரூ.95,052கோடி) ஆகிய நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி அதானி பவர் முன்னேறியுள்ளது.
6-வது நிறுவனம்
அதானி குழுமத்தில் டாப்50 நிறுவனப் ப ட்டியலில் இடம் பிடிக்கும் 6-வது நிறுவனம் அதானி பவர். அதானி க்ரீன் எனர்ஜி(ரூ.4.40லட்சம் கோடி), அதானி டிரான்ஸ்மிஷன்(ரூ.2.92லட்சம் கோடி), அதானி டோட்டல் கேஸ்(ரூ.2.66 லட்சம் கோடி), அதானி என்டர்பிரைசஸ்(ரூ.2.51லட்சம் கோடி), அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எக்னாமிக் ஜோன்(ரூ.1.85லட்சம் கோடி) ஆகியவை பட்டியலில் உள்ளன.
மின்திட்டங்கள்
அதானி வில்மர் நிறுவனத்தின் மதிப்பு ரூ.94,493 கோடியை எட்டி, 52-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.அதானி குழுமத்தில் அதானி பவர் நிறுவனம் தனியார் அனல்மின் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாகும். அதானி பவர் 12,410 மெகாவாட் மின் உற்பத்திசெய்யக்கூடிய 6 மின்நிலையங்களை குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் அமைத்துள்ளது. குஜராத்தில் 40 மெகாவாட் திறனுடைய சோலார் மின்நிலையமும் உள்ளது.
அதானிபவர் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த நிதியாண்டில் 3-வது காலாண்டில் ரூ.218.49 கோடியாகும். ஒட்டுமொத்த வருமானம் ரூ.5,593.58 கோடியாகும், ரூ.288 கோடி இழப்பில் உள்ளது. இது கடந்த 2020-21 நிதியாண்டின் 3-வது காலாண்டில் ரூ,7,099 கோடி வருமானம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.