
ஆதார் கார்டையும், பான்கார்டையும் இணைக்க மார்ச்-31ம்தேதி(நாளை) கடைசியாகும், இல்லாவிட்டார் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். வருமான வரி செலுத்துவோர் பான்கார்டு, ஆதார் கார்டை இணைத்தால் இ-ரிட்டனை விரைவாக பரிசோதிக்க உதவும்
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டன.
குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.
இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.பலமுறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு கடந்த 2021 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும் அசவுகரியக் குறைவைக் கணக்கில் கொண்டு பான்-ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு 2022ம் ஆண்டு மார்ச் 31-ம்தேதிவரை நீட்டிக்கப்பட்டது.அந்தக் காலக்கெடு நாளையுடன் முடிகிறது. நாளைக் காலக்கெடுவுக்குள் ஆதார் பான்கார்டை இணைக்காவிட்டால் ரூ.ஆயிரம் அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். ஆதலால் ஆதார்-பான் கார்டை இணைப்பது அவசியம். இணைந்திருப்பது குறித்து சந்தேகம் உள்ளவர்களும் பரிசோதிப்பது அவசியம்
இணைப்பது எப்படி?
1. ஆதார் பான இணைப்புக்கு முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
2. அந்த இணையதளத்தில் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
3. இணையதளப் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) பதிவு செய்ய வேண்டும்.
4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.
5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்
6. இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரம் தெரியவரும்
பான்-ஆதார் இணைக்கப்பட்டதா என எவ்வாறு பரிசோதிப்பது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.