petrol diesel price today: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்?

By Pothy RajFirst Published Mar 30, 2022, 12:13 PM IST
Highlights

petrol diesel price today: சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும்கூட, பெட்ரோல், டீசல் விலைஇந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 9வதுமுறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.

சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும்கூட, பெட்ரோல், டீசல் விலைஇந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 9வதுமுறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.

4 மாதம்உயரவில்லை

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 பைசா இன்று உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 9 நாட்களில் ரூ.5.60 பைசா அதிகரித்துள்ளது. 
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல்  பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 140 டாலராக அதிகரித்தபோதிலும்கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. 

ரூ.5.60 அதிகரிப்பு

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் கடந்த 21ம் தேதி முதல் நாள்தோறும்  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதுவரை 9 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 4 நாட்களில் தினசரி 80 காசுகள் அதிகரித்தன. அதன்பின் லிட்டருக்கு 50 பைசா, 30 பைசா, 55 பைசா, 35 பைசா என அதிகரித்தன. ஒட்டுமொத்தமாக  பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.5.60 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.01 பைசாவாகவும், டீசல் ரூ.92.27 பைசாவாகவும் அதிகரித்துள்ளது. 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 140 டாலராக இருந்தநிலையில் தற்போது பேரல் 113 டாலராகச் சரிந்துவிட்டது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காரணம் என்ன

மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம் கடந்த வாரம் அளித்த அறி்கையில், கடந்த 4 மாதங்களாக பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தாததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.19ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.10.60 முதல் ரூ.23.30 வரை உயர்த்த வேண்டும், டீசலில் லிட்டருக்கு ரூ.13.10 முதல் ரூ.24.90 வரை உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.

கிரிசில் நிறுவனம் அளித்த அறிக்கையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 110 முதல் 120 டாலர்வரை வந்துவிட்டால் பெட்ரோல் டீசலில் சராசரியாக லிட்டருக்கு ரூ.15 முதல் 20ரூபாய் வரை உயர்த்த வேண்டும். கச்சா எண்ணெய் விலை 100 டாலராக இருந்தால், பெட்ரோல் டீசலில் லிட்டருக்கு 9 முதல் 12 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

அந்த வகையில் பார்த்தால் கச்சா எண்மெய் விலை பேரல் 113 டாலராக இருக்கிறது. ஆதலால், இனிவரும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதற்கே வாய்ப்புகள் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட இன்னும் ரூ.10வரை பெட்ரோல், டீசல்விலையில் அதிகரி்க்கவும் வாய்ப்புள்ளது
 

click me!