aadhaar card: ஆதார் விவரங்களை பத்திரமாக்குங்கள்! மாஸ்க் ஆதாரை பதிவிறக்கம் செய்வது எப்படி?

By Pothy RajFirst Published Jun 20, 2022, 2:15 PM IST
Highlights

aadhaar card:இன்றைய டிஜிட்டல் காலத்தில் அனைத்துவிதமான பணிகளுக்கும் ஆதார் கார்டு அவசியமாகிறது. குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது முதல் வங்கிக்கணக்கு தொடங்குவது அவரை அனைத்துக்கும் ஆதார் கார்டு அவசியமாகிறது.

இன்றைய டிஜிட்டல் காலத்தில் அனைத்துவிதமான பணிகளுக்கும் ஆதார் கார்டு அவசியமாகிறது. குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது முதல் வங்கிக்கணக்கு தொடங்குவது அவரை அனைத்துக்கும் ஆதார் கார்டு அவசியமாகிறது.

அரசின் சலுகைகள், சமூக நீதித்திட்டங்கள் அனைத்தையும் பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியமாகிறது. ஆனால், யுஐடிஏஐ அமைப்பு வழங்கியுள்ள ஆதார் கார்டில் இருக்கும் 12 இலக்க எண் என்பது ஒருவருக்கு எந்தளவுக்கு முக்கியமானது என்பது பலருக்கும் தெரியவில்லை. 

ஒருவரின் இந்த 12 இலக்க ஆதார் எண்ணை வைத்து அவருக்கேத் தெரியாமல் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளையும் செய்யமுடியும். ஆதலால், ஆதார் கார்டில் இருக்கும் 12 இலக்க எண் மிகவும் முக்கியமானது.

இதை எந்தக் காரணத்தைக் கொண்டும் அவசியம் ஏற்பட்டால் இன்றி யாரிடமும் பகிர்தலும்,அளித்தலும் கூடாது. ஆதார் எண்ணை பாதுகாப்பாக வைக்கவே மத்திய அரசு மாஸ்க்ஆதாரை அறிமுகம்செய்துள்ளது. இந்த ஆதாரில் கடைசி 4 எண்கள் மட்டுமே தெரியும்.

இந்த மாஸ்க்டுஆதாரை யுஐடிஏஐ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம். ஒருவர் ஆதார் எண் அனைத்தையும் அளிக்க விரும்பாவிட்டால், இந்த மாஸ்க்டு ஆதாரைப் பயன்படுத்தலாம். இந்த மாஸ்க்டு ஆதார் கார்டை அரசின் அனைத்து துறைகளும் ஏற்றுக்கொள்ளும், அனைத்து சமூக நலத்திட்டங்களையும்  பெறுவதற்கும் பயன்படுத்த முடியும்.

சமீபத்தில் யுஐடிஏஐ அமைப்பு ட்விட்டரில் பதிவிட்ட செய்தியி்ல் “ நீங்கள் உங்கள் ஆதார் எண் அனைத்தையும் வெளியிட விரும்பாவிட்டால், விஐடி அல்லது மாஸ்க்டு ஆதாரை பயன்படுத்தலாம். இது நாடுமுழுவதும் அரசு சார்பில் ஏற்கப்படும். மாஸ்க்டு ஆதாரைப் myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar என்ற இணையதளத்தில் பெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்க்டு ஆதாரை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது:

1.    https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தை திறக்க வேண்டும்
2.    உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
3.    அதில் மாஸ்டு ஆதார் தேவை என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
4.    அதில் பேக்சா வெரிபிகேசனை பதிவிட வேண்டும்
5.    அதன்பின் ஓடிபி எண் பட்டனை அழுத்த வேண்டும்
6.    ஆதாரில் பதிவிடப்பட்ட செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை பதிவிட்டு  மாஸ்க்டு ஆதாரை பதவிறக்கம் செய்யலாம்.

click me!