
பணத் தேவைன்னா நம்ம எல்லாருமே முதல்ல கடன் வாங்கறது பத்திதான் யோசிப்போம். ஆனா, உடனடியா பணம் தேவைப்படும் சூழ்நிலைனா என்ன பண்றது? சாதாரண கடனுக்கு விண்ணப்பிச்சா, அது கிடைக்கறதுக்கு நிறைய நேரம் எடுக்கும். இதுக்கு ஒரு நல்ல தீர்வுதான் இன்ஸ்டன்ட் கடன். திடீர்னு வர சில செலவுகளைச் சமாளிக்க உதவுறதுதான் இன்ஸ்டன்ட் கடன்கள். ரொம்பக் குறைஞ்ச நேரத்துல, எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, வங்கிகள் வழங்குற கடன்தான் இது. நிறைய வகையான இன்ஸ்டன்ட் கடன்கள் இருக்கு. நமக்கு எது தேவைன்னு தெரிஞ்சுக்கிட்டு, அதைத் தேர்ந்தெடுக்கணும்.
இன்ஸ்டன்ட் கடன் வாங்கத் தகுதிகள் என்னென்ன?
வயசு: பொதுவா, 21 வயசுல இருந்து 60 வயசுக்குள்ள இருக்கறவங்களுக்கு இன்ஸ்டன்ட் கடன்கள் வங்கிகள் தர்றாங்க.
சம்பளம்: கடன் கேட்கறவங்க மாதம் குறைஞ்சது 15,000 ரூபாயில இருந்து 25,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கணும்.
தொடர்ச்சியான வருமானம்: வருமானம் தொடர்ச்சியா வரணும்னு வங்கிகள் எதிர்பார்க்கும். அதனால, குறைஞ்சது 6 மாசமாவது ஒரே இடத்துல வேலை செஞ்சிருக்கணும். சொந்தத் தொழில் பண்றவங்களா இருந்தா, குறைஞ்சது 2 வருஷமாவது ஒரே தொழிலைச் செஞ்சிருக்கணும்.
கடன் மதிப்பீடு: நல்ல கடன் மதிப்பீடு இருந்தா, கடன் வாங்கறது ரொம்ப சுலபம். 700-க்கு மேல கடன் மதிப்பீடு இருந்தா, சீக்கிரமே கடன் கிடைக்கும்.
தேவையான ஆவணங்கள்: அடையாள அட்டை, வருமானச் சான்றிதழ், வேலை செய்றதுக்கான ஆவணங்கள்னு தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கணும். அதாவது, ஆதார், பான், ஓட்டுநர் உரிமம், சம்பளச் சீட்டு, வங்கிக் கணக்கு விவரங்கள், வருமான வரித் தாக்கல் (ITR) எல்லாத்தையும் கொடுக்கணும்.
திருப்பிச் செலுத்துதல்: சம்பளத்தைப் பொறுத்துதான் கடன் தொகை கிடைக்கும். கடன் வாங்குறவங்க எவ்வளவு திருப்பிச் செலுத்த முடியும்னு வங்கிகள் கணக்குப் பார்ப்பாங்க. உதாரணமா, மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கறவங்களுக்கு 15 லட்சம் ரூபாய் கடன் கிடைக்கலாம். ஆனா, 25,000 ரூபாய் சம்பாதிக்கறவங்களுக்கு அந்த அளவுக்குக் கடன் கிடைக்காது.
PF பணம் எப்போது? எப்படி எடுக்க முடியும்? புதிய ரூல்ஸ் இதுதான்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.