கொரோனா மாத்திடுச்சு! 10 இந்தியர்களில் 8 பேர் இந்த ஆப்ஸைத்தான் பயன்படுத்தியிருக்காங்க

By Pothy RajFirst Published Feb 25, 2022, 3:12 PM IST
Highlights

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மெட்ரோ நகரங்களில் வாழும் இந்தியர்களில் 10 பேரில் 8 பேர் வங்கிக்குச் செல்லாமல் மொபைல் செயலி மூலம்தான் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மெட்ரோ நகரங்களில் வாழும் இந்தியர்களில் 10 பேரில் 8 பேர் வங்கிக்குச் செல்லாமல் மொபைல் செயலி மூலம்தான் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மொபைல் பேங்கிங் சேவை எவ்வாறு வளர்ந்துள்ளது, மக்கள் மாறியுள்ளார்கள் என்பது குறித்து ஃபரஸ்டர் எனும் ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியி்ட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது

ஆசியாவில் மொபைல் வங்கிச்சேவைக்கான செயலிகள் மிகவும் பிரபலமானவையாக இருந்துவருகிறது. மெட்ரோநகரங்களில் வசிக்கும்இந்தியர்களில் 83 சதவீதம் பேர், சீனாவில் மெட்ரோ நகரங்களில் வசிக்கும் மக்களில் 78 சதவீதம் பேர் மொபைல்பேங்கிங் செயலிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். 

அதிலும் கொரோனா பெருந்தொற்று வந்தபின், வாடிக்கையாளர்கள் வங்கியுடன் அதிகமான பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வங்கிக்கு நேரடியாகச் செல்லமுடியாத காரணத்தால் டிஜிட்டல் பரிமாற்றங்கள் அதிகிரத்துள்ளன. ஏடிஎம் பயன்பாடும் குறைந்து டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரித்துள்ளன. 

டெக் டைட்டன்ஸ், ஆன்ட் குரூப், ஆப்பிள், கூகுள், மெட்டா, பிங் இன், டென்சென்ட் ஆகியவை டிஜிட்டல் தொழில்நுட்பங்களான மொபைல், கிளவுட், அப்ளிகேஷன்கள், ரியல்டைம் டேட்டாஆகியவற்றைப் பயன்படுத்தி, வலுவான அடித்தளத்தை அமைத்து, சூழலுக்கு ஏற்றார்போல் தொழிலைமாற்றி அமைத்துள்ளன. ஆனால், நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு வங்கிகள் திணறுகின்றன

டிஜிட்டல் மாற்றம் என்பது ஒருபோதும் முடியாதது என்று பல வங்கிகள் தற்போதுஉணரத் தொடங்கிவிட்டன. உலகளவில் உள்ள வங்கிகளில் 35 சதவீதம், தங்கள் நிறுவனத்தை டிஜிட்டல் மாற்றத்துக்கு உட்படுத்தத் தொடங்கியுள்ளன. 19 சதவீதம் டிஜிட்டல் மாற்றத்துக்கு மாறிவருவதாகத் தெரிவித்துள்ளன.

25சதவீதம் வங்கிகள் டிஜிட்டல் மாற்றத்துக்கு தங்களை உட்படுத்துவதில் சிரமம் ஏதும் இல்லை. ஆனால், வாடிக்கையாளர்கள் டேட்டாவை பாதுகாப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகக் கூறி தயக்கம் காட்டி வருகின்றன.

ஆனால், கொரோனா பெருந்தொற்று மக்களின் எதிர்பார்ப்புகளை மாற்றிவிட்டது, போட்டியை அதிகப்படுத்தி, வங்கிகளை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு உட்படுத்தியுள்ளது

இவ்வாறு அந்தஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!